
கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் வரும், செப்டம்பர் 12,மற்றும் 13 ஆகிய இரு தேதிகளில் நடைபெறும் கண்காட்சி,மலைவாழ் மக்களின் கைவினை பொருட்களை காட்சி படுத்த உள்ளதாக விழா ஒருங்கிணைப்பாளர்கள் பேட்டி.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கோவையை சேர்ந்த சிவா அறக்கட்டளை சார்பாக, கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள சுகுணா கல்யாண மண்டபத்தில், இரண்டு நாட்கள் நடைபெறும் கண்காட்சியில் மலைவாழ் மக்களின் தயாரிப்புகள் காட்சிபடுத்த பட உள்ளது. இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பின் வாயிலாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய சிவா அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுப்ரமணிய சிவா கூறியதாவது..
“ஆதி சக்தி 2026 எனும் தலைப்பில் கோவை சுகுணா மண்டபத்தில் வரும்12 மற்றும் 13 ஆகிய இரு தேதிகளில் நடைபெறும் இந்த கண்காட்சியானது. கிராமப்புற மற்றும் பழங்குடியின சமூகங்களுடன், 33 ஆண்டுகளாக பணியாற்றி வரும், சிவா அறக்கட்டளையின் சேவையை நினைவு கூறும் வகையில் நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களில் இருந்து சுமார் 25,000 மேற்பட்ட பார்வையாளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆதி சக்தி 2026 கண்காட்சியின் முக்கிய நோக்கமாக, பெண்கள் தாங்கள் சொந்த தொழிலை தொடங்கவும், அதனை வளர்க்கவும் உதவுவதே என தெரிவித்தார். மேலும், சுய உதவிக் குழு பெண்கள், பழங்குடி கைவினை கலைஞர்கள், மற்றும் இயற்கை விவசாயிகள் தங்கள் தயார் செய்த கைவினைப் பொருட்கள், ஆடைகள், மூலிகை பொருட்கள், போன்றவற்றை, இக்கண்காட்சியின் வாயிலாக, விற்பனை செய்வார்கள். இதனை கான வருகை தரும் பொது மக்களையும், தொழில் முனைவரையும், நேரடியாக பல்வேறு ஆதரவுகளுடன் இணைக்க தனி உதவி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது இங்கு அமைக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவித்தார்.
மேலும் இங்கு பழங்குடியின சமூக மக்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சி, இசை நிகழ்ச்சிகள், நகைச்சுவை நிகழ்ச்சிகள், அனைத்து வயதினருக்கான மேஜிக் நிகழ்ச்சி, குழந்தைகளுக்கான விளையாட்டுக்கள், மற்றும் கேளிக்கை நடவடிக்கைகள், உணவு அரங்குகள், உள்ளிட்டவைகள் இங்கு அமையவுள்ளது என்று தெரிவித்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி,போத்தனுர்.







