
கேரளா மாநிலம் தமிழ்நாடு அருகே அமைந்துள்ள கேரள தமிழக எல்லை பகுதிகளில் தமிழர்களும் கேரள வாசிகளும் வசித்து வருகின்றனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களே அதிகமாக வசித்து வருகின்றனர். இவர்கள் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பதாகவே கேரளாவிற்கு குடிபெயர்ந்து கேரளா வாழ் மக்களாக மாறியுள்ளனர் என்பது குறிப்பிடப்பட்டது. அதிலும் இடுக்கி மாவட்டத்தில் அதிகமான தமிழர்கள் வசித்து வருகின்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிலையில் மூணாறு பகுதியில் கொஞ்ச நாட்களாகவே தமிழ் மற்றும் மலையாளம் மொழி பிரச்சனைகள் இருந்து வருவதாகவும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் கேரளாவைச் சார்ந்த மலையாளிகளே நிர்வகித்து வருவதாகவும் இதனால் தமிழ் மக்கள் தேவைகள் மற்றும் நிபந்தனைகள், வேண்டுதல்கள் நிராகரிக்கப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வந்த நிலையில் தற்பொழுது அதை உறுதிப்படுத்தும் வகையில் மிகவும் அதிர்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் கருணாகப்பள்ளி என்ற இடத்திலிருந்து சுற்றுலா வந்த இளைஞர்கள் பள்ளிவாசல் ஒன்றாம் மயில் நிறுத்தப்பட்டிருந்த ஜீப் உரிமையாளரின் அனுமதியின்றி ஜீப்பின் மேலே ஏறி புகைப்படம் எடுத்துள்ளனர் இதை தட்டி கேட்ட ஜீப் உரிமையாளரை பல நபர்கள் சேர்ந்து மது போதையில் உரிமையாளரை தாக்கியுள்ளனர் சம்பவ இடத்தில் இருந்த மற்ற வாகன ஓட்டிகள் உடனடியாக காவலருக்கு தகவல் தெரிவிக்க மூணார் காவல் நிலையத்தில் இருந்து வந்த காவலர்கள் இந்த பிரச்சினையை குறித்து முழுவதுமாக விசாரிக்காமல் ஜீப் உரிமையாளரை அடித்து துன்புறுத்தி அழைத்துச் செல்லும் காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.
இவர்கள் ஏற்கனவே சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் சாலைகளில் வாகனங்களை நிறுத்தி சாலைகளை மறித்து நடனமாடியதும் பயணிகளை தொந்தரவு படுத்தியதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
மேற்கண்ட விசாரணையில் சுற்றுலாவிற்கு வந்த இளைஞர்களில் ஒருவரின் சொந்தக்காரர் மூணார் காவல் நிலையத்தில் பணிபுரிவதாகவும் அவருடைய வழி நடத்துதலின் பெயரில் ஜீப் உரிமையாளரை அடித்து காலால் உதைத்த ஆடியோ வெளிவந்துள்ளது கண்டனத்துக்குரியது. இதைக் குறித்து தேவிகுளம் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஏ ராஜா அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்.
எனவே இதன் மூலமாக மூணார் பகுதிகளில் தமிழ் மக்களுக்கு மொழி பாகுபாடு காரணமாக தமிழர்களின் கோரிக்கைகளும் தேவைகளும் நிராகரிக்கப்படுகிறது என்பதே அப்பட்டமாக தெரிகிறது.
எனவே உடனடியாக கேரளா அரசு தமிழர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதிலும் அவருடைய தேவைகளை பூர்த்தி செய்வதிலும் போர்க்கால அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞரையும் அதற்கு உடந்தையாக இருந்த காவலரையம் கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன் மூணாறு.












