
கோவை மாவட்டம் வால்பாறையில் ஈமச்சடங்கு உதவித்தொகை பெறுவதில் நிலவி வந்த சிக்கல்களுக்கு தீர்வு காணக்கோரியும் இதர மக்கள் நலத்திட்டங்களை வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

வால்பாறை பகுதியில் உள்ள ஏழை, எளிய பொதுமக்கள் ஈமச்சடங்கு உதவித்தொகை பெறுவதற்குப் பல்வேறு சான்றிதழ்கள் கேட்கப்படுவதால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சுட்டிக்காட்டினர்.
இந்த நியாயமான கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நகராட்சி ஆணையர் இனிவரும் காலங்களில் பொதுமக்கள் எளிதாக உதவித்தொகை பெற பின்வரும் ஆவணங்களை மட்டும் சமர்ப்பித்தால் போதும் என உத்தரவிட்டுள்ளார்
கிராம நிர்வாக அலுவலரின் (VAO) சான்று
இறப்புச் சான்றிதழ்
பணம் பெறுபவரின் வங்கி பாஸ்புக் நகல்
விண்ணப்பதாரரின் உறுதிமொழி கடிதம்
பொதுமக்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில் இந்த உடனடி நடவடிக்கையை மேற்கொண்ட நகராட்சி ஆணையருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் வால்பாறை பகுதி பொதுமக்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.
மேலும் வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதிகளில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை உடனடியாகச் சீரமைக்க வேண்டும் என்றும் போதிய வெளிச்சம் இல்லாத பகுதிகளில் தெருவிளக்குகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டது.
இக்கோரிக்கைகளையும் கனிவுடன் பரிசீலித்த ஆணையர் விரைவில் இப்பணிகள் அனைத்தும் சரி செய்து தரப்படும் என உறுதி அளித்துள்ளார்.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி வால்பாறை P. பரமசிவம் கூறுகையில்
ஏழை மக்களின் சிரமத்தைப் புரிந்துகொண்டு நடைமுறைகளை எளிதாக்கிய நகராட்சி ஆணையருக்கு எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் எங்களது இந்தக் கோரிக்கைகளை உரிய முறையில் ஆட்சியாளரின் கவனத்திற்கு கொண்டு சென்ற நாளைய வரலாறு பத்திரிகைக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-உங்கள் ஸ்டார்
சுரேஷ் குமார்.













