கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் என்.எம்.எம்.எஸ் மாதிரி தேர்வினை கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை அவர்கள் தொடங்கி வைத்தார்!!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், ஸ்டாலின் நாராயணசாமி அகாடாமி இணைந்து நடத்தும் அரசு பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான என்.எம்.எம்.எஸ் இலவச பயிற்சி வகுப்புகளை கடந்த ஒரு வாரம் நடத்தியது. அதிக மாணவர்களை இத்தேர்வில் வெற்றிபெறவைக்க உதவிடும் வகையில் நடத்தப்பட்ட இப்பயிற்சியின் ஒரு பகுதியாக இன்று அனைத்து மாணவர்களுக்கும் மாதிரி தேர்வு கந்தர்வகோட்டை, வெள்ளாளவிடுதி, துவார், கல்லாக்கோட்டை, குளத்தூர்நாயக்கர்பட்டி ஆகிய 5 இடங்களில் பயிற்சி பெற்ற 250க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் இத்தேர்வினை எழுதினார்கள். கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேர்வினை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கந்தர்வ கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை அவர்கள் தேர்வினை தொடங்கி வைத்து அறிவுரை வழங்கினார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதில் மாவட்டத் தலைவர் மு.முத்துக்குமார் நிகழ்வினை ஒருங்கிணைத்தார். இந்நிகழ்விற்கு பயிற்சி மைய இயக்குனர் ராஜ்மோகன், அறிவியல் இயக்க மாவட்ட துணைத் தலைவர் முனைவர் பிச்சைமுத்து, பயிற்சி மைய ஆலோசகர் விஜயகுமார்ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை ஒன்றிய செயலாளர் அனைவரையும் ரகமதுல்லா வரவேற்றார். தேசிய வருவாய் வழி திறன் படிப்பு உதவித்தொகை தேர்வு எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை வழங்கப்பட்டு வருகிறது. மனத்திறன், படிப்பறிவுத்திறன் தேர்வு என இரண்டு பகுதிகளைக் கொண்டது. ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண் என மொத்தமாக 180 வினாக்கள் கேட்கப்பட்டிருக்கும் 180 மதிப்பெண் வழங்கப்படும். தேர்வில் தேர்விற்கான பயிற்சினை கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. தேர்வில் தேர்வு கண்காணிப்பாளராக பிரேமா, நிந்தியா, ரேவதி, சிந்து நதி, திவ்யதர்ஷினி, ரஷ்யா, மகாலெட்சுமி,மீனா,சுபாதா,சரிதா, பிரபா உள்ளிட்டோர் செயல்பட்டனர்.

இப்பயிற்சியைப் பெற்ற மாணவர்கள் வரும் 10.1.2025 அன்று அரசு நடக்கும் உதவித்தொகை ரூ.48000- பெறுவதற்கான தேர்வு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது என்றார். பயிற்சி மைய நிர்வாகிகள் மகேந்திரவர்மன், தேவி கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-ஈசா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts