
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு இன்று நடைபெறவிருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடும் வகையில் கிணத்துக்கடவு வடக்கு ஒன்றியம் வீரப்பகவுண்டனூர் கிளையில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் மர்ம நபர்களால் பிளேடு கொண்டு கிழிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இன்று (ஜனவரி 17) எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வீரப்பகவுண்டனூர் கிளை அதிமுக சார்பில் ஊர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இந்நிலையில், இன்று அதிகாலை பார்த்தபோது முக்கிய இடத்தில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர் பிளேடு கொண்டு கிழித்து சேதப்படுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது.
இந்தக் கீழ்த்தரமான செயலைச் செய்தவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இது ஜனநாயகத்திற்குப் புறம்பான செயல் என அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வன்மையாகக் கண்டித்துள்ளனர்.
மக்களின் இதயங்களில் வாழும் புரட்சித் தலைவரின் புகழைக் கண்டு அச்சப்படுபவர்களே இதுபோன்ற கோழைத்தனமான செயல்களில் ஈடுபடுகின்றனர்.
அரசியல் ரீதியாக எதிர்கொள்ளத் துணிவில்லாதவர்கள் நள்ளிரவில் போஸ்டர்களைக் கிழிப்பது மிகவும் மோசமான செயல் என கிளை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
உங்கள் செய்தியாளர்
-STAR சுரேஷ் குமார்.












