​​பொள்ளாச்சியில் காராள வம்சம் கலைச்சங்கத்தின் 100-வது அரங்கேற்றம் பிப்ரவரி 8-ல் பிரம்மாண்ட வேல் யாத்திரை பிப்ரவரி 3-ல்

​கோவை மாவட்டம் பொள்ளாச்சி காராள வம்சம் கலைச்சங்கத்தின் மிக முக்கிய மைல்கல்லான 100-வது அரங்கேற்ற நிகழ்வை முன்னிட்டு பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வரும் பிப்ரவரி 3-ஆம் தேதி பொள்ளாச்சியில் மாபெரும் வேல் யாத்திரை நடைபெற உள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த நிகழ்ச்சியை பொள்ளாச்சி மக்கள் நலச்சங்கம் இணைந்து நடத்துகிறது. இந்த எழுச்சிமிகு பேரணியானது பொள்ளாச்சி அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் இருந்து தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக KKG திருமண மண்டபத்தை சென்றடையும். யாத்திரையின் நிறைவாக KKG திருமண மண்டபத்தில் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகள் மற்றும் விழா நடைபெற உள்ளது.

இந்த வேல் யாத்திரையில் பங்கேற்கும் சொந்தங்களுக்கு தேவையான சீருடை (சேலை) மற்றும் வேல் ஆகியவை காராள வம்சம் கலைச்சங்கத்தின் சார்பாகவே வழங்கப்படும். சீருடைக்கான சேலைகளை முன்கூட்டியே பெற்றுக்கொண்டால் மட்டுமே ரவிக்கை (Blouse) தைப்பது போன்ற ஆயத்தப் பணிகளைச் செய்ய ஏதுவாக இருக்கும்.

எனவே இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் கலந்துகொள்ள விருப்பமுள்ள உறவுகள் தங்களது பெயர்களை சங்கத்தின் நிர்வாகிகளிடம் பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். ஏற்கனவே பல்வேறு கலைக்குழுக்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் தங்களது பெயர்களைப் பதிவு செய்து வரும் நிலையில் காலதாமதத்தைத் தவிர்க்குமாறு சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
​மேலும் தொடர்புக்கு
9345999200

நாளைய வரலாறு செய்திகளுக்காக

உங்கள் செய்தியாளர்
-𝚂𝚃𝙰𝚁 சுரேஷ் குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts