விளாத்திகுளம் அருகே 46-வது அசனப் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற மாட்டுவண்டி போட்டி!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஆற்றங்கரை ஊராட்சி தானியல் நகரில் 46-வது அசனப் பண்டிகையை முன்னிட்டு வதிரியார் சமுதாயம் மற்றும் அசனப்பண்டிகை தாரர்கள் செவன் குட்டீஸ் கபடி கிளப் இணைந்து நடத்திய பூஞ்சிட்டு,தேன்சிட்டு மாட்டு வண்டி ப் போட்டி நடைபெற்றது. தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம்,தேனி மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 40-க்கும் மேற்பட்ட ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டியை சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர் மார்க்கண்டேயன்
எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார்.

தேன்சிட்டு மாட்டு வண்டி போட்டியை அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தேசிய செயலாளர் சுரேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

முதலாவதாக நடைபெற்ற பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டிக்கு 5-மைல் தூரம் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தேன்சிட்டு மாட்டு வண்டி போட்டி நடைபெற்றது.
இந்த போட்டிக்கு 4- மைல் தூரம் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு போட்டியானது ஆற்றங்கரை விளாத்திகுளம் சாலையில் நடைபெற்றது.

பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டியில் முதல் பரிசை
தேவனுக்கே மகிமை கச்சேரி தளவாய்புரம், மாட்டு வண்டியும்
இரண்டாவது பரிசு முருகபாண்டி சிங்கிலிபட்டி – பெப்சி முனியசாமி மாட்டு வண்டியும்,
மூன்றாவது பரிசை கணேசன் சிங்கிலிபட்டி மாட்டுவண்டியும் பெற்றன. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற
தேன்சிட்டு மாட்டு வண்டி போட்டியில்
முதல் பரிசை முத்து தேவர் அமமுக – முத்துப்பிரியா கார்த்திக் மாமுநைனார்புரம்
இரண்டாவது பரிசை மார்கயேன்கோட்டை திருப்பதி மாட்டு வண்டியும் மூன்றாவது பரிசை சிவ மாயன் மார்கயேன்கோட்டை ஆகிய மாட்டு வண்டியும் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றனர்.

இந்த மாட்டு வண்டி போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்கள் மட்டும் ஒட்டி வந்த சாரதிகளுக்கு விழா கமிட்டி சார்பாக ரொக்க பணம் மற்றும் சுழற் கோப்பை வழங்கி கௌரவப்படுத்தப்பட்டனர்.

இந்த மாட்டுவண்டி போட்டியை காண விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதி கிராம பொதுமக்கள் மற்றும் பந்தய ரசிகர்கள் சாலையின் இருபுறமும் கூடி நின்று கைதட்டி உற்சாகப்படுத்தி கண்டு ரசித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் விளாத்திகுளம் திமுக மத்திய ஒன்றிய செயலாளர் ராமச்சுப்பு, மத்திய ஒன்றிய தேர்தல் பொறுப்பாளர் சீதாராமன், விளாத்திகுளம் பேரூர் கழக தேர்தல் பொறுப்பாளர் ராமச்சந்திரன் உட்பட திமுக நிர்வாகிகள் மற்றும் விழா கமிட்டினர் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts