தெய்வீக குணங்களின் திறவுகோல் வால்பாறையில் பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் எழுச்சியான புத்தாண்டு கொண்டாட்டம்!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வால்பாறையில் உள்ள பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயத்தின் சார்பாக ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தெய்வீக குணங்களின் திறவுகோல் என்ற தலைப்பில் சிறப்பு ஆன்மீக நிகழ்ச்சி நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தலைமை பிரம்மா குமாரி வால்பாறை பொறுப்பு சகோதரி கற்பகம் தலைமையில் பிரம்மா குமார் சந்தோஷ் முன்னிலையில் இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

சிறப்பு விருந்தினர்கள் திமுக நகரச் செயலாளர் சுதாகர், வால்பாறை பரமசிவம், எஸ்.ஆர்.எஸ். சுரேஷ் மற்றும் ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

காந்தி சிலை வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சுமார் 450-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் வரதான அட்டைகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் பேசிய வால்பாறை பரமசிவம் அவர்கள் இந்த மையத்தில் தொடர்ந்து யோகா மற்றும் தியானப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். மது மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் இந்தப் பயிற்சியில் கலந்துகொள்வதன் மூலம் அதிலிருந்து விடுபட்டுத் தங்களது வாழ்வாதாரத்தையும் குடும்பத்தையும் பாதுகாக்க முடியும் எனத் தெரிவித்தார். மேலும் ஆசையும் பேராசையும் இல்லாமல் இருந்தால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும், இருப்பதை வைத்துக்கொண்டு யாருக்கும் தீங்கு செய்யாமல் வாழ்ந்தால் வாழ்க்கை இனிமையாக அமையும்,  பொதுமக்கள் அனைவரும் புத்தாண்டு உறுதிமொழி ஏற்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த ஆன்மீக நிகழ்ச்சி இப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-உங்கள் ஸ்டார் சுரேஷ் குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts