கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி நடுநிலைப்பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான காமராஜர் விருது வழங்கி புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் பாராட்டு!!

கந்தர்வகோட்டை அக் 24

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வ கோட்டை ஒன்றியம், அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு 2026- 27 ஆம் ஆண்டிற்கான சிறந்த பள்ளிக்கான காமராஜர் விருது வழங்கப்பட்டது. காமராஜர் விருதினை புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கூ.சண்முகம் அவர்கள் வழங்கி பாராட்டினார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிகழ்வில் முதன்மை கல்வி அலுவலர் நேர்முக உதவியாளர் திருமேனி நாதன், பள்ளி துணை ஆய்வாளர் வேலுச்சாமி, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரின் கல்வி பிரிவு உதவியாளர் முத்துக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். கல்விக்கண் திறந்த காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு சிறந்த பள்ளிகளை ஊக்குவிப்பதற்கான பரிசளிப்பு திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த பள்ளிக்கானகாமராஜர் விருது வழங்கப்பட்டு வருகிறது.

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் அக்கச்சி பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளியில் எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளியின் வளர்ச்சிக்காக 100க்கும் மேற்பட்ட புரவலர்கள் இணைந்து உள்ளனர்.
பொதுமக்கள், பெற்றோர்கள் சார்பில் அக்கச்சிப்பட்டி கிராமத்தின் சார்பில் கல்விச்சீர் 2023 ஆம் ஆண்டு வழங்கும் விழாவில் மின்விசிறிடிவி, டேபிள் சேர், மின்விசிறி, வண்ணப் புகைப்படங்கள், கற்பித்தல் உபகரணங்கள், அறிவியல் அறிஞர்கள் தலைவர்கள் படங்கள், உள்ளிட்ட பொருட்களை ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட மதிப்பிலான கல்வி சீர் வழங்கி சிறப்பித்தனர். பள்ளி மேலாண்மை குழு மூலமும், பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலமும் பள்ளிக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து வருகின்றனர்.பள்ளியில் முப்பெரும் விழா, ஐம்பெரும் விழா,சிறப்பு தினங்கள், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஐம்பெரும் விழாக்கள் என பல்வேறு வகையான விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.

பள்ளியில் சிறப்பான கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. மாணவிகளுக்கு தன்னம்பிக்கை வளர்க்கும் விதமாக கராத்தே பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
கணினி கல்வியறிவை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசின் டி என் ஸ்பார்க் திட்டம் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து பாடங்களும் நவீன வசதிகளுடன் கற்பிக்கப்படுகிறது.

அரசு வழங்கும் விலையில்லா திட்டங்கள் அனைத்தும் மாணவர்களுக்கு சிறப்பாக வழங்கப்பட்டு வருகிறது. அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் விதமாக தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தும் துளிர் திறனறித் தேர்வில் எமது பள்ளி மாணவர்கள் கடந்த 16 ஆண்டுகளாக தேர்வு எழுதி வருகின்றனர். இதில் மாவட்ட, மாநில, அளவில் தேர்வு பெற்று கல்வி சுற்றுலா சென்றுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்கள் அறிவியல் ஆய்வு கட்டுரை சமர்ப்பித்து உள்ளூர் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஆய்வு கட்டுரை சமர்ப்பித்து மாவட்ட அளவில் தேர்வு பெற்றுள்ளனர். வானவில் மன்றம் நடத்திய அறிவியல் கண்காட்சியில் தொடர்ந்து ஒன்றிய அளவில் முதலிடம் பெற்று மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பரிசு பெற்றுள்ளனர். எமது பள்ளியில் தமிழ் மன்றம் தொடங்கப்பட்டு தமிழ் நூல்கள் மாணவர்கள் நூலகத்தின் வாயிலாக வாசிக்கின்றனர். தமிழ் மன்றத்தின் சார்பில் பேச்சுப்போட்டி ,கட்டுரை போட்டி ,ஓவிய போட்டி நடத்தப்பட்டு வருகிறது. ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட மன்றங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மன்ற போட்டிகளில் நமது பள்ளி மாணவர்கள் ஒன்றிய அளவில் தேர்வு பெற்று மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளனர். ஒவ்வொரு மாதமும் மாணவர்களுக்கு சிறார் திரைப்படம் திரையிடப்படுகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் கலைத் திருவிழா போட்டியில் எமது பள்ளி மாணவர்கள் தேர்வு பெற்று வருகின்றனர். தமிழில் எழுதுவதற்கும் வாசிப்பதற்கும் தேன் சிட்டு, ஊஞ்சல் உள்ளிட்ட இதழ்களும், தினசரி நாளிதழ்கள் தொடர்ந்து வாசிப்பதற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

நமது பள்ளியில் தனியாக நூலகம் அமைக்கப்பட்டு ஆயிரத்திற்கு மேற்பட்ட நூல்கள் நூலகத்தில் இடம்பெற்றுள்ளன மாணவர்கள் தொடர்ந்து நூலக புத்தகங்களை வாசித்து வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் பள்ளி மேலாண்மை குழு மிகச் சிறப்பாக கூட்டப்பட்டு பள்ளி மேலாண்மை குழு தலைவர், செயலாளர் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டு பள்ளியின் வளர்ச்சி குறித்து ஆலோசனை செய்யப்படுகிறது.

*பள்ளியின் உள்கட்டமைப்பு*
சுத்திகரிப்பட்ட குடிநீர், காற்றோட்டமான வகுப்பறை , சுத்தமான கழிவறை உள்ளிட்ட தரமான உள்கட்டமைப்பு வசதிகளுடன் பள்ளி இயங்கி வருகிறது.

*ஐம்பதாவது ஆண்டு பொன்விழா*

பள்ளி தொடங்கிய ஐம்பதாவது ஆண்டு பொன்விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பொன்விழாவை முன்னிட்டு நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டது.

*என் எம் எம் எஸ் தேர்வு*

எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு என் எம் எம் எஸ் தேர்வில் வெற்றி பெறுவதற்கு தொடர்ந்து சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுவரை இப்பள்ளியில் ஐந்திற்கு மேற்பட்ட மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற்று மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை பெற்று வருகின்றனர்.
போட்டித் தேர்விற்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
அறிவியல் திறனறித் தேர்வு, அறிவியல் ஒளி உள்ளிட்ட தேர்வு மாணவர்களுக்கு தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. வினாடி வினா போட்டி எமது பள்ளி மாணவர்கள் பங்கு பெற்று பரிசு பெற்று வருகின்றனர். கணித மன்றத்தின் மூலம் கணித திறன் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
சிறு சேமிப்பு.

சிறுவயதிலேயே சிறு சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் மாணவர்களுக்கு அஞ்சலகங்களில் சிறுசேமிப்பு கணக்கு தொடங்கப்பட்டு பணத்தை சேமித்து வருகின்றனர்.இப்பணியினை கணித பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை ஒருங்கிணைத்து வருகிறார்.
மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட பாடங்கள் நவீன ஸ்மார்ட் போர்டு வசதிகளோடு கற்பிக்கப்பட்டு வருகிறது. எல். கே.
ஜி முதல் எட்டாம் வகுப்பு வரை சிறப்பான கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. எமது பள்ளியின் சிறப்புகளைப் பாராட்டி 202 5 ஆம் ஆண்டில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் பேராசிரியர் அன்பழகன் விருது வழங்கப்பட்டது. அக்கசிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான ப காமராஜர் விருது வழங்கி சிறப்பித்த மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் ,மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களுக்கும், மாவட்ட கல்வி அலுவலர் அவர்களுக்கும் ,வட்டார கல்வி அலுவலர்கள் அவர்களுக்கும் மற்றும் அனைத்து உயர் அலுவலர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

காமராஜர் விருது பெற்றுள்ள அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளிக்கு கல்வியாளர் மருத்துவர் சுவாமிநாதன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், பள்ளியின் தூதுவர் கங்காதரன், முன்னாள் கல்வியாளர் பேராசிரியர் அமுதா,

பள்ளி மேலாண்மை குழு சார்பில் தலைவி நித்யா யோகேஷ் துணை தலைவி கல்வி நந்தினி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜேந்திரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள், முன்னாள் மாணவர்கள், இளைஞர்கள் பொதுமக்கள் பெற்றோர்கள் ஆசிரியர் பெருமக்கள், சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி, கணித பட்டதாரி ஆசிரியை மணிமேகலை அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா, இடைநிலை ஆசிரியர்கள் நிவின், வெள்ளைச்சாமி, செல்விஜாய், ஜெம்ம ராகினி சகாய ஹில்டா , மழலையார் ஆசிரியர் கௌரி கணிப்பொறி உதவியாளர் தையல்நாயகி உள்ளிட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். காமராஜர் விருது பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் பள்ளியின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தமிழக தலைமை நிருபர்

-ஈசா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts