
கோவை மாவட்டம் மதுக்கரை வனப்பிரிவுக்கு உட்பட்ட எட்டிமடை பகுதியில் கம்பி வேலியில் சிக்கி சிறுத்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

எட்டிமடை அருகிலுள்ள ஐயர்பதி பகுதியில் விவசாய நிலங்களை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள கம்பி வேலியில் சிறுத்தை ஒன்று சிக்கிக் கிடப்பதாக வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் அங்கு சிறுத்தை ஏற்கனவே உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
காட்டில் இருந்து வெளியேறிய அந்த சிறுத்தை வேலியைத் தாண்ட முயன்றபோது எதிர்பாராதவிதமாக சிக்கிக் கொண்டதாகத் தெரிகிறது. வேலியில் இருந்து விடுபட அது நீண்ட நேரம் போராடியதில் கம்பிகள் அதன் உடலில் ஆழமாகப் பாய்ந்துள்ளன.

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில்;-
முதற்கட்ட ஆய்வின்படி கம்பி வேலி உடலுக்குள் பலமாகப் பாய்ந்ததில் ஏற்பட்ட கடுமையான ரத்தக்கசிவு அல்லது உட்புற உறுப்புகள் சேதமடைந்ததால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கிறோம்.
சம்பவ இடத்திற்கு வந்த கால்நடை மருத்துவக் குழுவினர் சிறுத்தையின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வின் முடிவுகள் வெளியான பின்னரே சிறுத்தையின் வயது மற்றும் உயிரிழப்பிற்கான துல்லியமான காரணம் தெரியவரும் என வனத்துறை தெரிவித்துள்ளது.
வனப்பகுதியை ஒட்டியுள்ள இடங்களில் அமைக்கப்படும் சட்டவிரோத மின்வேலிகள் மற்றும் கூர்மையான கம்பி வேலிகள் காட்டுயிர்களுக்குப் பெரும் சவாலாக மாறி வருகின்றன மனித-விலங்கு மோதலின் ஒரு கோரமான முகமாகவே இந்தச் சம்பவம் பார்க்கப்படுகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தமிழக துணை தலைமை நிருபர் உங்கள்
-𝗦𝗧𝗔𝗥 𝗠. சுரேஷ்குமார்.












