டி20 உலகக்கோப்பை கொழும்பில் நாளை இந்தியா – பாக் மகா யுத்தம் ​மழை அச்சுறுத்தலால் ரசிகர்கள் பீதி வெற்றி யாருக்கு?

சர்வதேச கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் 2026 டி20 உலகக்கோப்பையின் லீக் ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் நாளை (பிப்ரவரி 15) கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்தத் தொடரின் மிக முக்கியமான போட்டியாகக் கருதப்படும் இப்போட்டிக்கு மழையால் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இலங்கை வானிலை ஆய்வு மையத்தின் தகவல்படி தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் நாளை கொழும்பில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை பகலில் சுமார் 94% மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
​ஆட்டம் தொடங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு (மாலை 5 மணி) மழைக்கான வாய்ப்பு அதிகம்
​ஆயினும் ஆட்டம் தொடங்கும் இரவு 7 மணி அளவில் வானம் மேகமூட்டத்துடன் இருக்குமே தவிர கனமழை பெய்ய வாய்ப்பில்லை என அக்யூவெதர் (AccuWeather) நம்பிக்கை அளித்துள்ளது.

தற்போது ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தலா 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்று தலா 4 புள்ளிகளுடன் வலுவாக உள்ளன.
​நாளை வெற்றி பெறும் அணி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெறுவதை உறுதி செய்யும்.
​ஒருவேளை மழை குறுக்கிட்டு ஆட்டம் ரத்து செய்யப்பட்டால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்படும். குரூப் சுற்று என்பதால் இதற்கு ரிசர்வ் டே (Reserve Day) கிடையாது.

டி20 உலகக்கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அசுர பலத்துடன் உள்ளது. இதுவரை நடந்த 8 சந்திப்புகளில் இந்தியா 7 முறை வெற்றி பெற்றுள்ளது. 2021-ல் மட்டுமே பாகிஸ்தான் வென்றது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி அந்த ஆதிக்கத்தைத் தொடருமா அல்லது சல்மான் அலி ஆகா தலைமையிலான பாகிஸ்தான் பதிலடி கொடுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

டி20 உலகக்கோப்பையில் தொடரும் இந்திய ஆதிக்கம் மழை வந்தாலும் வெற்றி நமதே என்ற சிந்தனையோடு

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தமிழக துணை தலைமை நிருபர்
உங்கள்
-𝗦𝗧𝗔𝗥 𝗠.சுரேஷ் குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts