
டி20 உலகக் கோப்பை தொடரின் 18-வது லீக் போட்டியில் இந்தியா நமிபியா அணிகள் இடையான போட்டி நேற்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
டாஸ் வென்ற நமீபியா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்தது.
இஷான் கிஷன் அதிரடியாக ஆடி 24 பந்தில் 61 ரன்கள் குவித்தார். பாண்ட்யா 28 பந்தில் 52 ரன்கள் குவித்தார்.
210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய நமீபியா அணி 18.2 ஓவரில் 116 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 93 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் தனது 10-வது தொடர் வெற்றியைப் பதிவு செய்து இந்தியா சாதனை படைத்துள்ளது.
ஹர்திக் பாண்டியா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-அருண்குமார் கிணத்துக்கடவு.












