
விளாத்திகுளம்! இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் நினைவு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் தமிழக ஏர் உழவன் அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் முதலாம் ஆண்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் மற்றும் பாரம்பரிய விதை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இப்போட்டிகள் பூஞ்சிட்டு மற்றும் தேன்சிட்டு என இரு பிரிவுகளாக நடத்தப்பட்டன. இதில் தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மற்றும் விருதுநகர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுமார் 82 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்துகொண்டன.
பூஞ்சிட்டு பிரிவு பந்தயத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் மற்றும் ராஜீவ் ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.தேன்சிட்டு பிரிவு போட்டியினை அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் மற்றும் ரோஹித் லாஜிஸ்டிக்ஸ் காண்டீபன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
விதை திருவிழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியில், பாரம்பரிய நெல் ரகங்கள், கரிசல் காடு பகுதியில் விளையக்கூடிய சிறுதானியங்கள் மற்றும் காய்கறிகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
மேலும், பனை ஓலையினால் செய்யப்பட்ட கம்மல், நெத்திச்சுட்டி, வளையல், கழுத்துப்பாசி மற்றும் தலைக்கு அணியும் குப்பிகள் எனப் பனைப் பொருட்கள் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தன. இக்கண்காட்சியினைச் சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு (மாட்டு வண்டி ஓட்டுநர்கள்) தமிழக ஏர் உழவன் விவசாயிகள் சங்கம் சார்பில் சிறப்பான பரிசுகள் வழங்கப்பட்டன. விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக மாடுகளுக்கு ஊட்டச்சத்தாக தலா 50 கிலோ எடையுள்ள இரண்டு சாக்கு பேரிச்சம்பழங்கள் சுற்றுச்சூழல் காக்க மரக்கன்றுகள் ஆகியவை வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தமிழக ஏர் உழவன் அனைத்து விவசாயிகள் சங்கத் தலைவர் ராஜேஷ் உழவர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கணேசன், ராமச்சந்திரன், விருதுநகர் மாவட்டத் தலைவர் ராமர், விளாத்திகுளம் ஒன்றியத் தலைவர் காளிமுத்து ராஜ், நகரத் தலைவர் செல்லத்துரை மற்றும் சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் எனப் பல்லாயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் காலை உணவு வழங்கப்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.












