நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற்றது!!

விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மருத்துவ முகாமை சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு முகாமின் அட்டை மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினார். முகாமில் பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு, இருதய நலம், குழந்தைகள் நலம், சித்த மருத்துவம், காது மூக்கு தொண்டை உள்ளிட்ட 17-துறை சார்ந்த மருத்துவர்கள் பயனாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

நிகழ்வில் மாவட்ட சுகாதார அலுவலர் வித்யா விஸ்வநாதன்,பள்ளி தலைமையாசிரியர் தபசுமுத்து, பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன், பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ், துணைத்தலைவர் வேலுச்சாமி, மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், வட்டார மருத்துவ அலுவலர் அசோக்குமார் மற்றும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் சமுதாய நல செவிலியர்கள் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts