
கோவை மாவட்டம் பொள்ளாச்சி மக்கள் நலச்சங்கம் சார்பில் பொதுமக்கள் நலம் வேண்டி 1008 பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட வேல் வழிபாடு நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சங்கத்தின் நிறுவனர் நித்தியானந்தம் தலைமையில் பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில் கையில் வேல் ஏந்தி பெண்கள் வழிபாடு செய்தனர்.
தொடர்ந்து அங்கிருந்து பல்லடம் சாலையில் உள்ள திருமண மண்டபம் வரை ஊர்வலமாகச் சென்றனர். அங்கு வேல்களுக்குச் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன.
இது குறித்து நிறுவனர் நித்தியானந்தம் கூறுகையில் சாதி, அரசியல் கடந்து மக்கள் ஒற்றுமையுடன் வாழவும் விவசாயம் செழிக்கவும் பாதுகாப்புக்காகவும் இந்த வழிபாடு நடத்தப்பட்டது எனத் தெரிவித்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
உங்கள் செய்தியாளர்
-𝚂𝚃𝙰𝚁 𝙼.சுரேஷ்குமார்.












