போத்தனூர் அருகே தடைசெய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த இருவர் கைது

போத்தனூர், கருப்பராயன் கோயில் பகுதியில் ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக போத்தனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் ஆய்வாளர் அசோக்குமார் மற்றும் உதவி ஆய்வாளர் மாடசாமி ஆகியோர், சலாபி நகர் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த சகுபார் சாதிக் (44) மற்றும் கரும்புக்கடை பகுதியை சேர்ந்த லதிப் (46) என்பவரை விசாரனை செய்ததில், அவர்கள் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து 4 செல்போன்கள், பணம் ரூ. 246700 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

MMH.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts