வால்பாறையில் யானை தாக்கிய வீடுகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நிவாரண உதவி!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வால்பாறை தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளருமான விஜய் அவர்களின் நல்லாசியுடன் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படி வால்பாறையில் யானை தாக்கிய தொழிலாளர் குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

​கோவை தெற்கு மாவட்டத் தலைவர் விக்னேஷ் அவர்களின் அறிவுறுத்தலின்படியும் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கிரிஷ் அவர்களின் மேற்பார்வையிலும் இந்த உதவித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

வால்பாறை சிங்கோனா பகுதி முதல் பிரிவில் நேற்று (04.02.2026) வனப்பகுதியிலிருந்து வெளியேறிய யானைகள் புகுந்து குடியிருப்புப் பகுதிகளைத் தாக்கின இதில் சேதமடைந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வீடுகளை தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில துணை பொதுச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் ஸ்ரீதர் தலைமையில் கட்சியினர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

நகரச் செயலாளர் ஆண்ட்ரூஸ் மற்றும் நகர இணைச் செயலாளர் சையது அலி ஆகியோர் முன்னிலையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான அத்தியாவசிய நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் த.வெ.க தொழிற்சங்கத் தலைவர் ஜி.எஸ். பிரகாஷ், இளைஞரணி அமைப்பாளர் ரியாஸ், தொழிற்சங்க கௌரவ ஆலோசகர் காய்கறி ஆறுமுகம், ஐ.டி விங் அமைப்பாளர் துரை, 3-வது வார்டு செயலாளர் சத்தியசீலன், இளைஞரணி துணை அமைப்பாளர் ரூபன் மற்றும் உறுப்பினர் சேர்க்கை அணி அமைப்பாளர் சங்கீதா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

​நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை 21-வது பூத் இணைச் செயலாளர் ராஜேஷ் மற்றும் பூத் முகவர் கயல்விழி ஆகியோர் சிறப்பாகச் செய்திருந்தனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதன் போது கோரிக்கை விடுக்கப்பட்டது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

உங்கள் செய்தியாளர்
-𝚂𝚃𝙰𝚁 𝙼.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts