
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வால்பாறையில் 1956-ஆம் ஆண்டு தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு நினைவுத் தூண் அமைக்க வேண்டும் என கோரி தமிழக முதல்வருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கடந்த 1956-ஆம் ஆண்டு வால்பாறை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் தங்களுக்கு வெறும் 10 பைசா கூலி உயர்வு கேட்டு ஒரு அறப்போராட்டத்தை நடத்தினர். அப்போது காவல்துறையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அப்பாராவ், குருசாமி, ஞானமுத்து, பழனி மற்றும் ஒரு தோழர் என மொத்தம் ஐந்து பேர் தங்களது உயிரைத் தியாகம் செய்தனர்.
உயிர்நீத்த ஐந்து தொழிலாளர்களின் நினைவாக அவர்கள் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியான அதே இடத்தில் ஒரு நினைவுத் தூண் (Memorial Column) அமைக்கப்பட வேண்டும்.

தற்போது வால்பாறை நகராட்சி மூலம் அந்த இடத்தில் புதுப்பித்தல் பணிகள் மற்றும் பொதுக்கூட்ட மைதானம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த கட்டுமானப் பணிகளோடு சேர்த்து தியாகிகளின் வரலாற்றை பொதுமக்கள் அறியும் வகையில் அங்கேயே அந்த நினைவுத் தூணை அமைத்துத் தர வேண்டும்.
வால்பாறை 𝙲𝙿𝙸-𝙼 செயலாளர் P. பரமசிவம் அவர்கள் கையொப்பமிட்டு இந்த மனுவை தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பியுள்ளார். தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் தியாகத்தை கௌரவிக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
உங்கள் செய்தியாளர்
-𝚂𝚃𝙰𝚁 𝙼.சுரேஷ்குமார்.












