
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு விடுத்தார் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக புது முகமாக களம் இறங்கிய சத்யா வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து விளாத்திகுளம் NDA கூட்டணி கட்சியினரிடம் மற்றும் பொதுமக்களிடையே அறிமுகமாக விளாத்திகுளம் வந்து விளாத்திகுளத்தில் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் வழிபாடு நடத்தி பின்னர் ஆரவாரம் முழங்க விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பாக வருகை தந்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

விளாத்திகுளத்தில் வருகை தந்த அதிமுக வேட்பாளர் சத்யாவை NDA கூட்டணிக் கட்சியினர் பட்டாசுகள் வெடித்து வெற்றிவேல் வீரவேல் என்று வீர முழக்கமிட்டு சால்வை அணிவித்து உற்சாகத்துடன் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு உள்ள முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கூட்டணி கட்சிகளும் முழு ஒத்துழைப்பு தந்து விளாத்திகுளம் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று அதிமுக வேட்பாளர் சத்யா கேட்டுக்கொண்டார் இந்நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டு வேட்பாளர் சத்யாவிற்கு வரவேற்பு கொடுத்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-பரணி பாலா.












