
கோவை மாநகராட்சி 99 மற்றும் 100-வது வார்டுக்கு உட்பட்ட போத்தனூர் – செட்டிபாளையம் சாலையில் மதில் சுவரைத் தாண்டி குதிக்க முயன்ற நிறைமாத கர்ப்பிணி குதிரை மீது அதிவேகமாக வந்த கார் மோதியது. இதில் குதிரை சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த விபத்து அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் தவறிவிட்டதாகவும் தெரு நாய்கள் தொல்லையால் சிறுவர்கள் விளையாடக்கூட அச்சப்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தமிழக துணை தலைமை நிருபர் உங்கள்
𝗦𝗧𝗔𝗥 𝗠.சுரேஷ்குமார்.












