
சமீபகாலமாக சமையல் கேஸ் சிலிண்டர் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதற்குத் தீர்வாக இப்போது பல வீடுகளில் மின்சார அடுப்பு (Induction Stove) பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கேஸ் அடுப்பில் சமைக்கும்போது அதிக வெப்பம் வீணாகிறது. ஆனால் மின்சார அடுப்பில் வெப்பம் வீணாகாமல் நேரடியாகப் பாத்திரத்திற்குச் செல்வதால் சமையல் சீக்கிரம் முடியும்.
கேஸ் கசிவு தீ விபத்து போன்ற பயம் இதில் இல்லை பட்டனைத் தட்டினால் வேலை முடிந்தது.
ஒரு சாதாரணக் குடும்பம் தினமும் இரண்டு மணி நேரம் சமைத்தாலும் இரண்டு மாதத்திற்குச் சுமார் 150 முதல் 200 யூனிட் மின்சாரம் மட்டுமே செலவாகும். இது கேஸ் சிலிண்டர் விலையை விடக் குறைவுதான்.
புகை இருக்காது பாத்திரத்தில் கரி பிடிக்காது. சமையலறையும் சூடாகாமல் குளிர்ச்சியாக இருக்கும்.
கரண்ட் கட் ஆகும் நேரங்களில் மட்டும் கேஸ் அடுப்பைப் பயன்படுத்திவிட்டு மற்ற நேரங்களில் மின்சார அடுப்பைப் பயன்படுத்துவதே (Hybrid Method) புத்திசாலித்தனம். இதனால் ஒரு சிலிண்டர் வரும் காலத்தை விட இரண்டு மடங்கு அதிக காலம் வரும். எதிர்காலத்தில் சூரிய ஒளி மின்சாரம் (Solar) மூலம் இந்த அடுப்புகளைப் பயன்படுத்தினால் சமையல் செலவே இருக்காது என்கின்றனர் நிபுணர்கள்.
நமது சமையலறை, நமது சேமிப்பு நவீன மாற்றங்களை ஏற்றுக்கொள்வோம் சிக்கனமாகவும் பாதுகாப்பாகவும் சமைப்போம் என்ற சிந்தனையோடு
நாளைய வரலாறு செய்திகளுக்காக
–திருமதி
சுகன்யா சுரேஷ்.












