டி20 உலக கோப்பையை வென்றது இந்திய அணி!!

ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின்இறுதிப் போட்டியில் நேற்று இந்தியா – நியூஸிலாந்து அணிகள் அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 255 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 46 பந்துகளில் 8 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 89 ரன்களும், அபிஷேக் சர்மா 21 பந்துகளில் 3 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 52 ரன்களும், இஷான் கிஷன் 25 பந்துகளில் தலா 4 சிக்ஸர், பவுண்டரிகளுடன் 54 ரன்களும் எடுத்தனர்.

இதையடுத்து 256 ரன்கள் இலக்குடன் பேட்டிங் செய்த செய்த நியூஸிலாந்து அணி 19 ஓவர்களில் 159 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரீத் பும்ரா 4 விக்கெட்டுகளும்,அக்சர் படேல் 3 விக்கெட்களும்
கைப்பற்றினர்.

இதன் மூலம் 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
ஆட்டநாயகனாக பும்ராவும், தொடர் நாயகனாக சஞ்சு சாம்சனும் தேர்வு செய்யப்பட்டனர்.

பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.27.48 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக
அருண்குமார் கிணத்துக்கடவு

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts