
தூத்துக்குடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி மாநகரின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு மேயா் ஜெகன் பொியசாமி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றாா். அதன் ஒரு பகுதியாக மாநகராட்சியின் பயன்பாட்டிற்காக வாங்கப்பட்டுள்ள புதிய இரண்டு ஜேசிபி இயந்திரங்களின் பயன்பாட்டினை துவக்கி வைத்தாா்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பின்னா் மாநகராட்சிக்குட்பட்ட கிருஷ்ணராஜபுரம் பிரதான சாலை சந்திப்பு பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தாா். தொடா்ந்து பொதுமக்களின் கோரிக்கையின்படி மாநகராட்சிக்குட்பட்ட ஸ்டேட் பாங்க் காலனி 60 அடி சாலையில் நடைபெற்று வரும் சாலை சீரமைப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தாா்.
உடன் மண்டல தலைவா் நிர்மல்ராஜ், பகுதி செயலாளர் ரவீந்திரன், வட்ட செயலாளர் ரவீந்திரன், கவுன்சிலா்கள் முத்துவேல், தெய்வேந்திரன் உள்பட பலா் உடனிருந்தனா்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பரணி பாலா.












