
பொள்ளாச்சி: தமிழக சட்டமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் கே. நித்யானந்தம் அவர்களை கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் என்.கே. பகவதி இன்று நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்தச் சந்திப்பின் போது மாவட்டத் துணைத் தலைவர்கள் சிற்பி ஜெகதீஸ் மற்றும் மோகன்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய என்.கே. பகவதி அவர்கள் பின்வரும் கருத்துக்களை முன்வைத்தார்.
தமிழகத்தில் மக்கள் நலத் திட்டங்கள் தொடரவும் சிறப்பான ஆட்சியைத் தரவும் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்க மக்கள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.
அகில இந்திய காங்கிரஸ் பேரியக்கத்தின் இளம் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் முழுமையான ஆசிபெற்ற வேட்பாளராக கே. நித்யானந்தம் களம் காண்கிறார்.
கொங்கு மண்டலத்தின் வளர்ச்சிக்காகவும், பொள்ளாச்சி மக்களின் குரலாகச் செயல்படவும் தகுதியான வேட்பாளர் கே. நித்யானந்தம் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெரும் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
இந்தியா கூட்டணியின் அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து களப்பணியாற்றி வருவதால் பொள்ளாச்சி தொகுதியில் வெற்றி உறுதி எனத் தொண்டர்கள் உற்சாகத்துடன் தெரிவித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தமிழக துணை தலைமை நிருபர் உங்கள்
-𝗦𝗧𝗔𝗥 𝗠.சுரேஷ்குமார்.












