மக்களுக்கு எதிராக செயல்படும் அரசு அதிகாரிகள்??

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலா தலமான மூணாறு அருகே அமைந்துள்ள சின்ன கானல் பஞ்சாயத்து பகுதியில் அரசு அதிகாரிகள் மக்களுக்கு எதிராக செயல்படுகிறார்கள் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தமிழர்களை மையமாகக் கொண்டு அமைந்திருக்கும் மிக முக்கியமான சுற்றுலாத்தலமான சின்ன கானல் கிராம பஞ்சாயத்து பகுதி எந்த விதமான வளர்ச்சி மேம்பாட்டு திட்டங்களும், மக்கள் நலனை காக்கும் வகையில் அரசு அறிவித்த திட்டங்களும் மக்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் போய் சேர்வதில்லை என்பது நிதர்சனமான உண்மை.

சாலை அமைப்பு, சுற்றுலா வளர்ச்சி மற்றும் மக்களின் வாழ்வாதாரத்திற்கான இலவச வீட்டு வாரியத் திட்டம்,மின்சார அமைப்பு திட்டம்,குடிநீர் திட்டம் திடக்கழிவு மேலாண்மை போன்றவற்றில் அரசு எந்தவித முக்கிய நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் மக்கள் நேரடியாக சென்று அரசு அதிகாரிகளை அணுகும் போதும் காலம் தாழ்த்துவதும் பல காரணங்களை கூறி மக்களுக்கு செய்ய வேண்டிய சேவைகளை செய்யாமல் தடுத்து நிறுத்துவதாக கூறப்படுகின்றது.

சின்னகானல் பஞ்சாயத்து தலைவர் மற்றும் துணைத் தலைவர் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து வரும் நாட்களில் போராட்டம் நடத்தவும் முடிவு எடுத்துள்ளனர் குறிப்பாக வருவாய் துறை அதிகாரிகள் இலவச வீடு திட்டங்களுக்கு இப்பகுதியில் உள்ள மக்களுக்கு சாதக நிலையை கொண்டு வராமல் பல காலங்களாக தடையை ஏற்படுத்துவதாக மற்றும் ஒரு வீட்டு பயன்பாட்டிற்கு மின்சாரம் எடுக்க வேண்டுமானால் வருவாய் துறை இடம் ஒப்புதல் பெற வேண்டும் என்ற சட்டத்தின் கீழ் வருவாய் துறை அதிகாரிகள் மின்சார திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்படுவதில்லை என்றும் பல அரசு அலுவலகங்களுக்கு மக்கள் இங்கு மங்குமாக அலகழிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
அதிகமான வருமானத்தை வளர்ச்சிகளையும் கொடுத்துக் கொண்டிருக்கும் சின்ன கானல் பஞ்சாயத்தில் அங்கு வாழும் மக்கள் இருக்கும் சரியான வாழ்வதற்காக தர வேண்டிய அனைத்தும் தர வேண்டும் அரசு அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண வேண்டும். அது மட்டும் அல்லாமல் அப்பகுதி மக்களிடையே பல கருத்துக்களும் நிலவுகின்றன இங்கு வசிப்போருக்கு வீட்டு மனை பட்டா நிலம் வாங்குவதற்கான பட்டாகள் அரசு அதிகாரிகள் பகுதியில் வாழும் உரிமையை தட்டிப் படிப்பதாகவும் அவர்களை பகுதியில் இருந்து துரத்துவதற்கான முன்னேற்பாடுகளை செய்வதாகவும் மக்களிடையே கருத்துக்கள் நிலவுகின்றன.

எனவே அரசு உடனடியாக இதனை கையில் எடுத்து உடனடி தீர்வு காண வேண்டும் என சின்னகானல் பஞ்சாயத்து பிரசிடெண்ட் மற்றும் துணை பிரசிடெண்ட் அந்தோணி ராஜ் எதிர்க்கட்சி மெம்பர் வேல்மணி மற்றும் அனைத்து மெம்பர்களின் சார்பிலும் கோரிக்கை விடுத்துள்ளனர்..

நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஜான்சன் மூணாறு.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts