
தூத்துக்குடி மத நல்லிணக்க இப்தாா் நிகழ்ச்சிக்கு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிாிவு மாவட்ட தலைவர் மைதீன் தலைமை வகித்தாா்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் இப்தாா் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசுகையில் மதநல்லிணக்கத்தை பேணி பாதுகாக்கும் தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் தலைமையின் கீழ் நாம் அணைவரும் ஓற்றிணைந்துள்ளோம். தமிழகத்தில் அணைத்து தரப்பினரும் மதநல்லிணக்கத்தோடு சகோதர பாசத்தோடு அண்ணன் தம்பி மாமன்மச்சான் என்று பழகி வருகிறோம். சீா்குலைப்பதற்கு என்று மற்ற மாநிலங்களில் குழப்பத்தை ஏற்படுத்தியதை போல் தமிழகத்திலும் ஓரு கூட்டணி அமைத்து கொண்டு வருகின்றனா். அவா்களுக்கு மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சாா்பில் தளபதியாா் வழியில் சாியான பாடம் புகட்ட வேண்டும் தமிழகத்தில் மட்டும்தான் எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சியில் நன்மை கிடைக்கிறது. அவரவா் அவா்களது மதத்தை வழிபடலாம் அதில் எந்த தவறும் கிடையாது. இதை தான் சாப்பிடவேண்டும் அணிய வேண்டும் என்னுடைய கொள்கையை தான் பின்பற்ற வேண்டும் என்று சுதந்திர இந்தியாவில் கட்டாய தினிப்பு செய்கிறது பிஜேபி நாங்கள் எல்லா மதத்தையும மதிக்கிறோம். மத வெறியை எதிா்கிறோம். அனைவரும் வரும் தோ்தலில் ஓற்றுமையாக பணியாற்றி 200 தொகுதி என்று முதல்வா் நிா்ணயித்துள்ள இலக்கையும் தாண்டி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் இளைஞர்கள் முதல் முதியவா்கள் வரை அனைவரையும் அரவணைத்து களம் காண்போம். அதற்கு அணைவரும் தயாராக வேண்டும் என்று பேசினாா்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ டேனியல்ராஜ், திமுக மாவட்ட துணைச்செயலாளர் ராஜ்மோகன் செல்வின், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சகாயராஜ், முன்னாள் மாவட்ட தலைவர் முரளிதரன், சமத்துவ மக்கள் கழக மாவட்ட செயலாளா் அற்புதராஜ், மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் ஹசன் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட தலைவா் மீராசா, எஸ்டிபிஐ கட்சி மாவட்ட துணை தலைவர் மைதீன்கனி, மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளா் யூசுப், மதிமுக நக்கீரன் ேபச்சிராஜ் மகாராஜன், பொன்ராஜ், மாவட்ட திமுக மருத்துவ அணி தலைவா் அருண்குமாா், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், கவுன்சிலா் எடின்டா, காங்கிரஸ் நிா்வாகிகள் பிரபாகரன், நாராயணசாமி, பெருமாள் கோவில் அறங்காவலா் குழு தலைவா் செந்தில்குமாா், மற்றும் மணி, உள்பட பல்ேவறு அமைப்பை சேர்ந்தவா்கள் இப்தாா் நோன்பில் கலந்து கொண்டனா்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.












