
தூத்துக்குடி முன்னாள் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும், தூத்துக்குடி விமான நிலைய ஆலோசனை குழு உறுப்பினருமான முரளிதரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி. சண்முகம் பிரபல நடிகை நயன்தாராவின் கண்ணியத்திற்கும் புகழுக்கும் களங்கம் கற்பிக்கின்ற வகையில் கருத்து கூறியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சினிமா துறையில் பிரபல நடிகை மட்டுமல்ல திருமணம் முடிந்து குடும்ப வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்ற நயன்தாராவின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் பேசுவது எந்த வகையில் நியாயம்? அதிமுகவின் முதல்வராக, பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவும் சினிமா துறையில் இருந்து வந்தவர் தான் என்பதை சி.வி சண்முகம் மறந்துவிட்டார் போல் தெரிகிறது. சிவி சண்முகம் நிதானத்தில்தான் பேசுகிறாரா என்று தெரியவில்லை. அவர் நிதானத்தோடு இருந்திருந்தால் இது போன்ற கருத்துக்களை தெரிவித்திருக்க மாட்டார். எனவே சி.வி. சண்முகம் நயன்தாராவிடம் பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும். என்று முரளிதரன் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
–பூங்கோதை நடராஜன்.












