
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலாத்தலமான மூணாறு பகுதியில் சாலைகள் மற்றும் கட்டிடங்கள் மிகவும் குறுகலாகவே அமைந்துள்ளது. அதிக உயரத்தை கொண்டுள்ள பகுதியில் தற்போது சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்தே வருகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிலையில் மூணாறு மற்றும் மூணாறு சுற்றியுள்ள பகுதியில் வசித்து வரும் மக்கள் மூணார் டவுனில் அமைந்துள்ள காய்கறி மார்க்கெட் மட்டும் பழமுதிர் மார்க்கெட் சென்று தங்களுடைய அன்றாட தேவைகளுக்காக மார்க்கெட்டுக்கு சென்று வருகின்றனர்.
ஆனால் தற்பொழுது மார்க்கெட்டுக்குள் மார்க்கெட்டின் உள்ளே நடைபாதையில் ஆக்கிரமித்து கடை வைத்துள்ளதால் கூட்ட நெரிசல்கள் ஏற்பட்டு மார்க்கெட்டுக்குள் உள்ளே மற்றும் வெளியே செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே மூனார் பஞ்சாயத்து மார்க்கெட் நடைபாதையில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருக்கும் கடைகளை உடனடியாக எடுக்கக் கோரி மூணாறு பஞ்சாயத்து சார்பில் உத்தரவிட்டுள்ளது.

காலை முதல் 10 மணி வரை நடைபாதையில் பொருட்களை வைப்பதற்கு அனுமதி அளித்து பின்னர் நடைபாதையில் பொருட்கள் வைக்க யாருக்கும் அனுமதி கொடுக்கப்பட மாட்டாது என்று மூணார் பஞ்சாயத்து சார்பில் மூணாறு பஞ்சாயத்து தலைவர் எஸ் விஜயகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார் ஐந்து நாட்களுக்குள் கடைகளை அகற்ற உத்தரவிட்டுள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன் மூணாறு.













