மூணாறு மக்களுக்கு இன்ப அதிர்ச்சி!!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலாத்தலமான மூணாறு பகுதியானது கேரளா சுற்றுலா தலங்களில் மிகவும் முக்கியமான ஒன்று மட்டுமல்லாது இங்கு தமிழ் மற்றும் கேரளாவை சார்ந்த இரு மாநில மக்களும் சமமாக வாழ்ந்து வருகின்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

சுற்றுலாத்தலமான மூணாறு பகுதியில் சுற்றுலா தளங்களை உருவாக்கி இப்பகுதியை மேம்படுத்தி அதிகமான தேயிலை கம்பெனிகளை உருவாக்கிய பெருமை இப்பகுதியில் வாழும் தமிழர்களுக்கு உரியது. ஆனாலும் தமிழர்கள் வாழும் இப்பகுதியில் எல்லா வசதிகளும் அங்கு வசிக்கும் மக்களுக்கு கிடைத்துள்ளதா? என்பது கேள்விக்குறியாகவே இருந்தது . அதில் மிக முக்கியமான ஒன்று நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று இருந்த சூழ்நிலையை தாண்டி தற்பொழுது நோய்கள் என்பது தவிர்க்க இயலாத ஒன்றாக மாறி உள்ளன. காரணம் இயற்கை சூழலில் இருந்து விலகி வாழ்வதே மிக முக்கியமான காரணியாக அமைந்துள்ளது.

இந்த சூழ்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் பல ஆயிரக்கணக்கான மக்கள் தங்களுடைய தேவைகளுக்காக மருத்துவமனையை அணுக வேண்டுமானால் பல கிலோமீட்டர் தூரங்கள் கடந்து அடிமாலி உடும்பன்சோலை, கோட்டயம் மற்றும் தமிழ்நாடு மாநிலமான தேனி,மதுரை போன்ற பகுதிகளுக்கு சென்று சிகிச்சை பெற வேண்டிய சூழல் இருந்து வந்துள்ளது.

மூணாறு பகுதியில் மல்டி ஸ்பெஷாலிட்டி (பல்நோக்கு) மருத்துவமனை என்பது வெறும் கனவாக மட்டுமே இருந்தது. ஆனால் தற்பொழுது மூணாறில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டுவதற்கான ஒப்புதல் கிடைத்து முதல் கட்ட கட்டுமான பணி தொடங்கி உள்ளதாக கருதப்பட்டுள்ளது. இதற்கான விழா சில தினங்களுக்கு முன்பாக தொடக்க விழா நடத்தப்பட்டது.

இதில் சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் அவர்கள் கலந்துகொண்டு முதல் கட்டிடத்திற்கான ஆணையை வெளியிட்டார் மற்றும் தேவைகளும் சட்டமன்ற உறுப்பினர் வழக்குரைஞர் ஏ ராஜா அவர்கள் விழாவை துவங்கி துவங்கி வைத்து உரையாற்றினார் மற்றும் தேவைகளை தலைமை மருத்துவர், சப் கலெக்டர் மற்றும் கட்சி பிரமுகர்கள் கொண்டனர்.

தேவிகுள சட்டமன்ற உறுப்பினர் ஏ ராஜா அவர்கள் கூறியதாவது தேவிகுளத்தில் ஏற்கனவே இயங்கி வரும் சென்ட்ரல் மருத்துவமனை பகுதியில் 5 ஏக்கர் நிலம் வரன்முறை படுத்தப்பட்டு பல்நோக்கு மருத்துவமனை சுமார் 62 கோடி செலவில் கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எந்தவித தடை இன்றி இந்த மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதனால் மூணார் மற்றும் மூணாறு சுற்றி வசிக்கும் மக்களும் அவ்வப்போது வந்து செல்லும் சுற்றுலா பயணிகளுக்கும் இது ஒரு நல்ல பயன்பாட்டு வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-ஜான்சன் மூணாறு.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts