
விளாத்திகுளம், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கல்லூரி மற்றும் தூத்துக்குடி The Eye foundation Super Speciality Eye Hospitals இணைந்து தமிழ்நாடு அரசு, இந்து சமய அறநிலையத்துறை சட்டமன்ற அறிவிப்பு 2025- 2026 அறிவிப்பு எண் 47 ன் படி, கல்லூரிச் செயலர் திரு. K. இராமு அவர்களின் வழிகாட்டுதலுக்கு இணங்க, கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முனைவர். கா. குமாரி அவர்களின் தலைமையில் மாணவ – மாணவியர்களுக்கு கட்டணமில்லா கண்பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ மருத்துவமனையின் பொதுத்தொடர்பு அலுவலர் திரு. ச. ராம கிருஷ்ணன் காந்தி அவர்கள் தலைமையிலான மருத்துவக் குழுவினர் இந்த முகாமில் சிறப்பாக தங்கள் பங்களிப்பினையாற்றினர். கல்லூரியில் பயிலும் மாணவ – மாணவியர்கள், பணிபுரியும் உதவிப்பேராசியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் ஆகியோர் கண் பரிசோதனை முகாமில் கலந்து கொண்டு பயன்பெற்றனர். முகாம் ஏற்பாடுகளை கணினி பயன்பாட்டியல் துறை உதவிப்பேராசிரியர் முனைவர். செ. பிரபாவதி அவர்கள் செய்திருந்தார்.
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.











