
வேலூர் சிறை மற்றும் சீிருத்த நிர்வாக அகாடமி (APCA) மற்றும் தமிழ்நாடு சிறை மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை ஆகியவை இணைந்து நடத்திய அலுவல் சாரா பார்வையாளர்களுக்கான (Non-Official Visitors) ஒருநாள் விழிப்புணர்வு கருத்தரங்கம் 27.03.2026 அன்று வேலூரில் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தமிழக சிறைத்துறை இயக்குநர் உயர்திரு கே. சங்கர் இ.கா.ப. அவர்கள் விழாவைத் தொடக்கி வைத்து சிறைச்சாலை நிர்வாகத்தை மேம்படுத்துவதில் சமூகப் பிரதிநிதிகளான பார்வையாளர்களின் முக்கியத்துவத்தை விளக்கினார். APCA இயக்குநர் உயர்திரு பிரதீப் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
சிறைவாசிகளின் உரிமைகள் சட்ட விதிகள் மற்றும் அவர்களைக் கையாளும் விதம் குறித்துப் பின்வரும் அதிகாரிகள் பயிற்சியளித்தனர்.

டாக்டர் பி. கோவிந்தராஜன் (துணை இயக்குநர் APCA) சிறைவாசிகளிடம் மேற்கொள்ள வேண்டிய கண்ணியமான அணுகுமுறை பற்றி விளக்கினார்.
திரு. ஷண்முக சுந்தரம் (துணைத் தலைவர், வேலூர்) உரிமைகள் மற்றும் பொறுப்புகளைத் தெளிவுபடுத்தினார்.
முனைவர் அ. முருகேசன் (துணைத் தலைவர், மதுரை) சிறைவாசிகளின் மனநிலை மற்றும் குற்றவியல் பின்னணியை மனிதநேயத்தோடு எதிர்கொள்ளும் விதம் குறித்துப் பேசினார்.
திரு. எம்.ஆர். ரவிசங்கர் (மூத்த வழக்கறிஞர்) சட்ட விதிகளுக்கு உட்பட்ட செயல்பாடுகளை வலியுறுத்தினார்.
இப்பயிற்சி முகாமில் பொள்ளாச்சி கிளைச் சிறைச்சாலையின் அலுவல் சாரா பார்வையாளர்களாகஇயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர்கள் திரு. கமலக்கண்ணன் மற்றும் மா. வெற்றிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பயிற்சி குறித்து அவர்கள் கூறுகையில் சிறைவாசிகளின் சீர்திருத்தம் மற்றும் சமூக மறுவாழ்வு குறித்து ஆழமான புரிதலை இந்தப் பயிற்சி அளித்துள்ளது. இது எங்கள் சமூகப் பணியை மேலும் வலுப்படுத்தும் எனத் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியை பேராசிரியர் டாக்டர் அ. மோகன்ராஜ் மற்றும் பேராசிரியர் டாக்டர் ப்யூலா ஆகியோர் ஒருங்கிணைத்தனர். பயிற்சியின் முடிவில் பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பார்வையாளர்களுக்குப் பயிற்சிக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தங்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கிய சிறைத்துறை அதிகாரிகளுக்கு பங்கேற்பாளர்கள் நெகிழ்ச்சியுடன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தமிழக துணை தலைமை நிருபர் உங்கள்
-𝗦𝗧𝗔𝗥 𝗠.சுரேஷ்குமார்.












