48வது ஆண்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் சூரங்குடி அருள்மிகு ஸ்ரீ முனியசாமி ஸ்ரீ பெத்த நாச்சி அம்மன் திருக்கோவிலில் மாசி திருவிழாவை முன்னிட்டு திருக்குறிப்பு தொண்டர் நாயனார் சமுதாய மக்கள் சார்பாக நடத்தப்படும் 48வது ஆண்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் 1.3.26 அன்று நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த மாட்டுவண்டி பந்தயம் சூரங்குடி To விளாத்திகுளம் சாலையில் நடத்தப்பட்டது இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் சின்ன மாட்டு வண்டி எல்கை தூரம் 6 மயிலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது சின்ன மாட்டுவண்டி பந்தயத்தை துவங்கி வைத்தவர் வல்லப்பதாஸ் பாண்டியன் அவர்கள் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொண்டு நல்லன்பட்டி இதனைத் தொடர்ந்து பூஞ்சிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் போகவும் வரவும் 4 மைல் தூரம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்த மாட்டு வண்டி பந்தயத்தை தொடங்கி வைத்தவர் காவல்துறை கண்காணிப்பாளர் சக்திவேல் அவர்கள் இந்த பந்தயத்தில் மதுரை தேனி புதூர் பாண்டியாபுரம் தூத்துக்குடி விளாத்திகுளம் சிங்கிலிபட்டி திண்டுக்கல் மற்றும் பல ஊர்களில் இருந்து ஏராளமான மாட்டு வண்டிகள் கலந்து கொண்டனர் இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கும் ஓட்டி வந்த சாரதிக்கும் பரிசுகளும் வழங்கப்பட்டனர் மாட்டுவண்டி பந்தயத்தை சூரங்குடி To விளாத்திகுளம் சாலையில் இருபுறமும் பொதுமக்கள் ஏராளமானோர் கண்டு கழித்தனர் மற்றும் இந்தப் பந்தயத்தில் முன்னிலை வகித்தவர்
இராமச்சந்திரன் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர்
செல்வராஜ் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சூரங்குடி சுப்பிரமணியன் அவர்கள் திமுக தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர்
முனியசாமி என்ற திரவியம் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர்
அவர் ராமசுப்பிரமணியன் அவர்கள் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சூரங்குடி முனியசாமி நிலா சீ புட் சூரங்குடி
ரெங்கசாமி தூத்துக்குடி
மற்றும் விழா கமிட்டினர் கலந்து கொண்டனர்

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts