
கோவை ஆர். எஸ். புரத்தில் செயல்பட்டு வரும் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையான ராவ் மருத்துவமனை சார்பில், கர்ப்பிணிப் பெண்கள், புதிய தாய்மார்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காக “தாய்ப்பால் ஊட்டுதலும் அதற்கு அப்பாலும்” என்ற தலைப்பில் தாய்ப்பால் ஊட்டுதல், பிறந்த குழந்தைகளின் ஊட்டச்சத்து மற்றும் குழந்தை உணவளிப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பிக்கி ஃப்ளோ கோவை, கோவை ஆக்ருதி ரோட்டரி சங்கம் மற்றும் கோவை இன்னர் வீல் சங்கம் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, குழந்தை பிறந்த பின் ஆரம்ப மாதங்களில் தாய்மார்கள் தன்னம்பிக்கையுடன் குழந்தையைப் பராமரிக்க தேவையான நடைமுறை அறிவை வழங்குவதாகும்.
நிகழ்ச்சியில் மூத்த குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவரான டாக்டர் கே. எஸ். கிருஷ்ணசாமி, பாலூட்டல் ஆலோசகர் மற்றும் குழந்தை ஊட்டச்சத்து நிபுணரான திருமதி பேபி ஸ்ரீ ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மேலும் இதுகுறித்து பேபி ஸ்ரீ கூறும்போது :- தாய்ப்பால் ஊட்டும் முறைகள் குறித்து கலந்துரையாடல் வடிவில் விளக்கமளித்தார்.
குழந்தை சரியாக மார்பகத்தைப் பற்றிப் பால் குடிக்கும் முறை, தாய்ப்பால் கொடுக்கும் நிலைகள், பால் சுரப்பு, தாய்ப்பால் ஊட்டும்போது ஏற்படும் பொதுவான சவால்களை சமாளிக்கும் வழிமுறைகள் குறித்து அவர் எடுத்துரைத்தார்.
மேலும் தாய்ப்பால் ஊட்டுதல் என்பது குழந்தைக்கு உணவளிப்பது மட்டுமல்ல. தாய்-குழந்தை இடையே வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் பாசப்பிணைப்பை உருவாக்கும் செயலாகும். சரியான ஆதரவும் நடைமுறை வழிகாட்டுதலும் கிடைத்தால், ஒவ்வொரு தாயும் தன்னம்பிக்கையுடன் தாய்ப்பால் ஊட்ட முடியும்.
இந்த நிகழ்ச்சியில் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் புதிய தாய்மார்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, நிபுணர்களிடம் தங்களது சந்தேகங்களை முன்வைத்து விளக்கங்களைப் பெற்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி,போத்தனுர்.





