
பொள்ளாச்சியில் உள்ள கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகள் கலந்தாலோசனைக் கூட்டம் மாவட்டத் தலைவர் எம்.பி. சக்திவேல் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மாநில பேச்சாளர் அன்சர் பாய் வரவேற்றார். முன்னாள் இளைஞர் மாவட்டத் தலைவர் கே.வி.கே. நடராஜன், மாவட்ட துணை தலைவர் ஆர். கோபாலகிருஷ்ணன்,மாவட்ட பொருளாளர் எஸ்.ஸ்ரீதர், பொள்ளாச்சி நகரத் தலைவர் ஏ.செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கட்சியை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் புரணமைப்பது எனவும்,வட்டார நகர்ந்தோறும் மண்டல கமிட்டி அமைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.


வருகிற உள்ளாட்சித் தேர்தல் குறித்து வெற்றி வாய்ப்புள்ள இடங்களை கண்டறிந்து அந்தப் பகுகளில் கட்சிப் பணிகளையும் பொதுப் பணிகளையும் செவ்வனே செய்வதென்று தீர்மானிக்கப்பட்டது. உடுமலை பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடி கட்டணத்தை தற்காலிகமாக நிறுத்திவிட்டு திடீரென்று நெடுஞ்சாலை ஆணையம் வசூல் பண்ணுவதை நிறுத்த வேண்டும் என்றும்,பொது மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து குறைவான கட்டணத்தில் சுங்கவசூல் செய்ய வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் முன்னாள் மாவட்ட தலைவர் என்.கே.பகவதி, பிசிசி உறுப்பினர்கள் எஸ்.பி. கே.கணேசன்,எம்.கே. தினேஷ்.மாவட்ட நிர்வாகிகள் கே.ஆர்.என். தேவகுமார், தளிசேகர், கே.எம்.தங்கவேல்,கராத்தே எஸ்.பஞ்சலிங்கம்,வி.எஸ்.ஆர்.கே.மோகன்,ஜி.மதுசூனன், கே.ஜே.ஏ.ராஜன்,வி.சி முருகன்,குறிச்சி மணி,தென்னரசு,சர்க்கிள் தலைவர் ஏ. முகமது இஸ்மாயில்,நகரத் தலைவர் அமீர்,வட்டார தலைவர்கள் கோட்டூர் பூபதி,பி.சாந்தலிங்கம், தமிழ்ச்செல்வன்,ஆர்.பழனிச்சாமி,ஜி.ஏ.கண்ணன்,பிரகாஷ்,ஆட்டோ கணேஷ்,மோகன் குமார்,எஸ்.சிவானந்தம்,ராஜசேகர்,லியாகத் அலிகான்,பி.வி.எஸ்.கவிதா,மரகதம்,ராபியா,தேவிகா கோவிந்தராஜ்,இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் சேதுபதி,சர்புதீன்,கோபால் காந்தி, அய்யாசாமி,ராமசாமி, செல்வராஜ் உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தமிழக தலைமை நிருபர்
-ஈசா.





