தூத்துக்குடியில் தென் மண்டல வீல் சேர் கிரிக்கெட் போட்டியை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்!!


தூத்துக்குடி தமிழ்நாடு வீல் சேர் கிரிக்கெட் அசோசியேஷன் மற்றும் ஜேஎம்ஜே கிரிக்கெட் அகாடமி இணைந்து நடத்தும் தேசிய வீல் சேர் சாம்பியன்ஷிப் தென் மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டிகளின் துவக்க விழா மீளவிட்டானில் உள்ள என்.பெரியசாமி திடலில் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

போட்டிகளை ஜேஎம்ஜே கிரிக்கெட் அகாடமி இயக்குநர் மருத்துவர் மகிழ் ஜீவன் தலைமை வகித்தார். தமிழ்நாடு வீல் சேர் கிரிக்கெட் சங்க தலைவர் துரை பாண்டியன் அனைவரையும் வரவேற்றார். வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் துவக்கி வைத்து பேசுகையில் போட்டிகள் சிறப்பாக நடைபெறுவதற்கு முழு முயற்சி எடுத்த தமிழ்நாடு வீல் சோ் கிாிக்கெட் சங்க நிா்வாகிகள் ஜேஎம்ஜே கிாிக்கெட் அகாடமிக்கும் வாழ்த்துக்களை தொிவித்துக்கொள்கிறேன். இந்த போட்டிகளை நமது பகுதியில் நடத்துவதற்கு முக்கிய பாங்காற்றியவா்களுக்கு பாரட்டு தொிவிப்பதுடன் கலந்து கொள்ள வருகை தந்துள்ள பல மாநில வீரா்களையும் வரவேற்று வாழ்த்துகிறேன் எவ்வளவு சிரமங்களுக்கு மத்தியில் இந்த போட்டியில் மாற்றுத்திறனாளிகள் கிாிக்கெட் விளையாட்டில் ஆர்வம் கொண்டுள்ளது என்பது சாதாரன விஷயம்அல்ல போட்டியில் வெற்றி பெறுவது என்பதைவிட எவ்வளோ பிரச்சனைகளைகடந்து பங்குபெற்று விளையாடி வரும் நீங்கள் ஒவ்வொருவரும் வெற்றியாளா்கள் தான் சாதனையாளா்கள் தான் என்று பேசினாா்.
முன்னதாக, போட்டிகளில் கோவா, கர்நாடகா, மற்றும் தமிழ்நாடு ஆகிய அணிகளுக்கான மாற்றுத் திறனாளர் கிரிக்கெட் வீரர்கள் பங்கு பெற்றனர். போட்டிகள் மார்ச் 12ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டிகளுக்கு தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தினர் நடுவர்களாக பங்கேற்கின்றனர்.

விழாவில் காமராஜ் கல்லூரி பேராசிரியர் ஆனந்த், தொழிலதிபா் கே.பெரியசாமி, மாநகர திமுக இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மற்றும் மணி ஜேஎம்ஜே கிரிக்கெட் அகடமி நிர்வாகிகள், தமிழ்நாடு வீல் சேர் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

செய்தியாளர்
-பரணி பாலா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts