அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் வாக்குகள் சேகரித்தார்கள்!!

விளாத்திகுளம்: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் R.சத்யா B.Sc., அவர்கள் தற்போது விளாத்திகுளம் பகுதியில் உள்ள கிராம பொதுமக்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதில் கூட்டணி கட்சி பொறுப்பாளர்களும் தொண்டர்களும் கலந்து கொண்டு கழகாசலபுரம் பிள்ளையார்நத்தம் பட்டியூர் சுப்பிரமணியபுரம் பிரச்சாரத்தின் போது பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் சரவணா கிருஷ்ணன் பேசுகையில் நமது விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் இதுவரைக்கும் இரண்டு பெண் வேட்பாளர்கள் அதிமுக சார்பாக போட்டியிட்டுள்ளனர் ஆனால் அவர்கள் தோற்கவில்லை அதேபோல் சத்யா அவர்களையும் வெற்றி பெற செய்ய வேண்டும் ஆகையால் இரட்டை இலை சின்னத்தில் உங்கள் வாக்குகளை செலுத்தி பெரும் வாரியான வெற்றியை பெற செய்வோம் என்று வாக்குகள் சேர்த்தார்கள். இதில் ஒன்றிய செயலாளர்கள் மகேஷ் பால்ராஜ் ராமச்சந்திரன் நகர செயலாளர் மாரிமுத்து அமமுக கூட்டணி கட்சி ஒன்றிய செயலாளர் வடிவேல் முருகன் பாரதிய ஜனதா கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts