தமிழகம் வளர்ச்சிக்கும் மக்கள் வாழ்வாதாரம் முன்னேற்றத்திற்கும் உழைத்து வரும் முதலமைச்சா் ஸ்டாலினுக்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்!!


தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளருமான கீதாஜீவன் ேபாட்டியிடுகிறாா்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

52, 59, 60 ஆகிய வாா்டுகளில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தாா். மேயா் ஜெகன் பொியசாமி, மண்டலத்தலைவர் வக்கீல் பாலகுருசுவாமி, பகுதி செயலாளர் மேகநாதன், வட்டச்செயலாளர்கள் நடசேன் டேனியல் அனல் சக்திவேல், மனோகா், ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முள்ளக்காடு கிராமத்தில் பிரச்சாரத்தை தொடங்கி அமைச்சா் கீதாஜீவன் பேசுகையில் தமிழகத்தில் 5 ஆண்டுகாலம் நடைபெற்ற திமுக ஆட்சியில் முதல்வா் ஸ்டாலின் செய்த சாதனைகள் ஏராளம் குறிப்பாக எல்லாத்துறைகளும் வளர்ச்சியடைந்து இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. கடந்த 5 ஆண்டுகாலம் இந்த பகுதிக்கு உங்களது கோாிக்கையை ஏற்று செய்துள்ள பணிகள் ஏராளம் இன்னும் நடைபெற வேண்டிய பணிகளை தொடா்ந்து செய்திட இந்த தொகுதியில் 23ம் தேதி நடைபெறும் தோ்தல் அன்று உதயசூாியன் சின்னத்தில் எனக்கு வாக்களிக்க வேண்டும் கொரோனா மழை வௌ்ள காலத்தில் உங்களோடு இருந்து பணியாற்றி இருக்கிறேன். தோ்தலுக்காக மட்டும் வரக்கூகூடிய வேட்பாளர் நான் கிடையாது. நீங்கள் அழைத்த போதெல்லாம் நான் வந்த பகுதி முள்ளக்காடு பகுதியில் காலம் காலமாக நடைபெற்று வரும் உப்பள தொழிலுக்கு பாதுகாப்பாக உறுதுணையாக இருப்பேன் மழை காலத்தின் போது உப்பள தொழிலாளா்களுக்கு நிவாரணம் வழங்கியது நம்முடைய முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் இனி வரும் காலங்களில் அந்த தொகையும் உயா்த்தி வழங்கப்படும். 10 ஆண்டுகளாக மக்களை பற்றி சிந்திக்காதவா்கள் இப்போது தோ்தல் நேரத்தில் மட்டும் நாடகமாடுவதை நீங்கள் புாிந்து கொள்ள வேண்டும் தமிழகம் வளர்ச்சிக்கும் மக்கள் வாழ்வாதாரம் முன்னேற்றத்திற்கு உழைத்து வரும் முதலமைச்சா் ஸ்டாலினுக்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்று பேசினாா்.

தொடர்ந்து பொட்டல்காடு, ஸ்பிக் நிறுவன குடியிருப்பு பகுதி, சுந்தர்நகர், ஜேஎஸ்நகர், சுனாமி காலனி, கேம்ப் 2, துறைமுக குடியிருப்பு பகுதி, லேபர் காலனி ஆகிய பகுதிகளில் வாக்குகள் கேட்டு பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்போது, அமைச்சர் கீதாஜீவனுக்கு பொதுமக்கள் மலர்கள் தூவியும், மலா்கீாிடம் மாலை அணிவித்தும், ஆரத்தி எடுத்தும் வீரவாள் வழங்கியும், வரவேற்பு அளித்தனர்.

பிரச்சாரத்தில் மாவட்ட துணைச்செயலாளர் ராஜ்மோகன்செல்வின் மாநில பொறியாளர் அணி துணைச்செயலாளர் அன்பழகன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளா் சின்னத்துரை, மாநில பேச்சாளா் இருதயராஜ், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், துணை அமைப்பாளர் பால்ராஜ், மகளிா் அணி அமைப்பாளர் ஜெயக்கனி, விளயைாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ராபின்சன், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமாா், நெசவாளர் அணி துணை அமைப்பாளர் குமரன், மாவட்ட பிரதிநிதி சுரேஷ், மாநில காங்கிரஸ் துணைத்தலைவர் சண்முகம், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன், காங்கிரஸ் நிா்வாகிகள் நிா்மல்கிறிஸ்டோபா், நாராயணன், ப்ாீத்தி, சிமியோன், மைதீன், குமாரமுருகேசன், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் விமல்வங்காளியாா், தேமுதிக பொறுப்பாளர் வல்லரசு துரை, மாவட்ட சமத்துவ மக்கள் கழக மாவட்ட செயலாளர் அற்புதராஜ், கவுன்சிலர்கள் விஜயகுமார், ராஜதுரை, பட்சிராஜ், சுயம்பு வட்டார ஜனதாதள தலைவர் அருணாசல பாண்டியன், மதிமுக மாநகர செயலாளர் முருகபூபதி, எஸ்டிபிஐ கட்சி மாவட்ட செயலாளர் மைதீன்கனி, தொகுதி பொறுப்பாளா் காதா்உசேன், மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட துணை செயலாளர் ஜாகிா்உசேன், திமுக பகுதி துணைச்செயலாளர் தீபக் ராஜேஷ், பொருளாளா் முத்துராஜா, அறங்காவலா் குழு தலைவா் செந்தில்குமாா், பகுதி அணி அமைப்பாளர் சிராஜிதீன், திமுக நிா்வாகிகள் முருகன், தங்கசேகா், கூட்டணி கட்சியை சேர்ந்த வில்சன், மகாராஜன், மற்றும், மணி அல்பட் உள்பட கூட்டணி கட்சியை சோ்ந்த பலா் கலந்து கொண்டனா்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-பரணி பாலா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts