
கோவை மாநகரம், போத்தனூர் பகுதியில் வசிக்கும் நான்கு சிறுமிகள் திடீரென காணாமல் போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதுகுறித்து பெறப்பட்ட புகாரின் பேரில், காவல் துறை ஆணையாளர் உத்தரவின்படி உடனடியாக தீவிர தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. போத்தனூர் உதவி காவல் ஆணையாளர் மேற்பார்வையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சிறுமிகளை விரைவாக கண்டுபிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
மேலும், சம்பவத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, நகரம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் பரிமாறப்பட்டு, பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஒருங்கிணைந்த மற்றும் துரிதமான நடவடிக்கைகளின் பலனாக, காணாமல் போன நான்கு சிறுமிகளும் ரயில் நிலையத்தில் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்கள் சென்னை நோக்கி பயணம் செய்ய முயன்ற நிலையில், காவல் துறையினரால் தக்க நேரத்தில் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
மீட்கப்பட்ட சிறுமிகள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, எந்தவித பாதிப்பும் இல்லாமல் இருப்பது உறுதி செய்யப்பட்டு, அவர்களது பெற்றோர்/பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
சமீபகாலமாக குழந்தைகள் கடத்தல் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், இச்சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், காவல் துறையினரின் துரிதமான நடவடிக்கையால் எந்தவித பாதிப்பும் ஏற்படுவதற்கு முன்பே சிறுமிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தில் துரிதமாகவும் திறமையாகவும் செயல்பட்ட காவல் துறையினரின் பணியை பொதுமக்களும் காவல் துறை உயரதிகாரிகளும் பாராட்டினர். மேலும், தேடுதல் பணியில் ஒத்துழைத்த உள்ளூர் மக்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினருக்கும் காவல் துறை நன்றியை தெரிவித்துள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-அனஸ்.












