
கேரளா மாநிலம் சுற்றுலா தளமான மூணாறு பகுதிக்கு சென்னை அருகே உள்ள விழுப்புரம் மாவட்டத்திலிருந்து ஆறு பேர் கொண்ட பயணிகள் நேற்று மூணாறு வந்துள்ளனர். அவர்கள் ஜீப் சஃபாரி மேற்கொண்டுள்ளனர். அப்போது பைசன்வேலி அருகே டீ ஃபேக்டரி (factory) அருகே ஜீப் கட்டுப்பாடு இழந்து சாலையின் அருகே கல்லில் மோதி தலை கீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதில் வாகன ஓட்டுநர் உட்பட ஒன்பது பயணம் செய்துள்ளனர். அதில் ஆறுபேர் காயமடைந்துள்ளனர். ஒருவருக்கு தலையில் பலமான காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. காயமடைந்த ஆறு பேரையும் அடிமாலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டிரைவர் ராஜாகாடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன் மூணாறு.












