வால்பாறையில் கோர விபத்து! – சுற்றுலா சென்ற டெம்போ டிராவலர் கவிழ்ந்து 10 பேர் உயிரிழப்பு பயணிகள் சோகம்!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வால்பாறைக்கு கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பெருந்தலமன்னாவிலிருந்து சுற்றுலா வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் சென்ற டெம்போ டிராவலர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மீதமுள்ள பயணிகள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கேரள மாநிலம் பெருந்தலமன்னாவிலிருந்து 16 பேர் கொண்ட சுற்றுலாப் பயணிகள் குழு டெம்போ டிராவலர் வாகனத்தில் KL 11 AM 7288 வால்பாறைக்குச் சுற்றுலா வந்துள்ளனர். சுற்றுலா முடிந்து மீண்டும் கேரளாவுக்குத் திரும்பிச் சென்று கொண்டிருந்தபோது வால்பாறை மலைப்பாதையின் 13-வது கொண்டை ஊசி வளைவில் வாகனம் சென்றுகொண்டிருந்தது.

அப்போது எதிர்பாராதவிதமாக வாகனத்தின் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டெம்போ டிராவலர் சாலையோரம் இருந்த பள்ளத்தில் தலைகுப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 10 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்து குறித்துத் தகவல் அறிந்த வால்பாறை காவல்துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்த மற்ற பயணிகள் மீட்கப்பட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டன.

இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுற்றுலா வந்தவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

வால்பாறை
– பேபி.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts