
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் புலி தாக்கி மூதாட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
வால்பாறை பகுதியைச் சேர்ந்த இன்னாசியம்மாள் (76) என்ற மூதாட்டி வயது முதிர்வு மற்றும் பார்வைக் குறைபாடு காரணமாகச் சரியாக நடக்க முடியாத நிலையில் இருந்துள்ளார். சம்பவத்தன்று அவர் தனது வீட்டின் அருகே அமர்ந்திருந்தபோது திடீரென அங்கு வந்த புலி அவரைத் தாக்கி இழுத்துச் சென்றுள்ளது.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது மூதாட்டியைக் காணவில்லை. இது குறித்து உடனடியாக வனத்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து விரைந்து வந்த வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். தேடுதலின் முடிவில் மூதாட்டியின் உடல் மீட்கப்பட்டது. மூதாட்டி இன்னாசியம்மாளுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வீட்டின் அருகிலேயே புலி வந்து மூதாட்டியைத் தூக்கிச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. வனவிலங்குகள் ஊருக்குள் வருவதைத் தடுக்க வனத்துறை உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறை
-பேபி திவ்யகுமார்.












