விபத்துகள் இல்லாத போதனூர்! – விழிப்புணர்வு ஏற்படுத்தும் டி3 காவல் ஆய்வாளர் அசோக் குமார்!!

கோவை மாநகர காவல்துறை சார்பில், சாலை விபத்துகளை முழுமையாக குறைக்கும் நோக்கில் ‘விபத்து இல்லாத போத்தனூர்’ என்ற சிறப்பு முன்னெடுப்புத் திட்டம் போத்தனூர் பகுதியில் தீவிரமாக ஆய்வாளர் அசோக் குமார் அவர்கள் மற்றும் போலீசாரால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மாநகர காவல் ஆணையர் மற்றும் தெற்கு காவல் துணை ஆணையர் அவர்களின் உத்தரவின்படி, போத்தனூர் உதவி காவல் ஆணையர் அவர்களின் நேரடி மேற்பார்வையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக குறிச்சி வளைவு, நஞ்சுண்டாபுரம் போத்தனூர் சாலை ரயில் நிலைய புது கேட் , செட்டிப்பாளையம் சாலை, வெள்ளலூர் சாலை, பாலக்காடு பைபாஸ் உள்ளிட்ட முக்கிய போக்குவரத்து பாதைகளில் காவல்துறையினர் தொடர்ந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பல வாகனங்களை நிறுத்தி ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விழிப்புணர்வையும் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் பல முக்கிய இடங்களில் ஃபேரிகார்டுகள் அமைக்கப்பட்டு, அதிக வேகத்தில் செல்லும் வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

சாலை பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதுடன், ஹெல்மெட் அணிந்து வரும் இருசக்கர ஓட்டுனருக்கு ஆய்வாளர் அசோக்குமார் அவர்கள் இனிப்புகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பொதுமக்களும் போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு, அவர்களுக்கு தேவையான சரியான விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றனர்.

‘விபத்து இல்லாத நாள்’ என்பதை இலக்காக கொண்டு, போத்தனூர் பகுதியில் சாலை பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறை அதிகாரி அசோக்குமார் அவர்களுடன் காவல்துறையினரும் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகின்றனர்.

“தம்பி மயில்
குடிபோதையில் வாகனம் ஓட்டாதே உயிரை போக்காதே..”

“விபத்து இல்லாத போத்தனூர் – பாதுகாப்பான நம் ஊர்!”

“போத்தனூரில் விதி கடைபிடிப்பு – உயிர் பாதுகாப்பு உறுதி!”

“விதிகளை மதிப்போம்… விபத்துகளை தவிர்ப்போம் – போத்தனூர் காவல் நிலையம் முன்னோடி!”

“வேகம் குறை… போத்தனூர் பாதுகாப்பு நிறை!”

“விபத்து இல்லாத நாள் – போத்தனூரின் காவல் நிலையம் பெருமை நாள்!”

“சட்ட ஒழுங்கு மட்டும் அல்ல
போக்குவரத்து ஒழுங்கு – போத்தனூர் முன்னேற்றம்!
ஒவ்வொரு விதியும் ஒரு உயிர் – போத்தனூர் பாதுகாப்பு சுவர்!”

என்ற விழிப்புணர்வுகளை காவல்துறையினர் சிறப்பாக இன்று ஏற்படுத்தி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தலைமை நிருபர்

-ஈசா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts