விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து!!

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் நேற்று மாலை ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் கோவிந்தநல்லூரில் உள்ள கட்டனார்பட்டி பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் தொழிலாளர்கள் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பட்டாசு ஆலையில் பணிபுரிந்து கொண்டிருந்த தொழிலாளர்கள் சிலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பு வைக்கப்பட்டனர். மேலும், இந்த வெடிவிபத்தில் பட்டாசு ஆலையின் நான்கு அறைகள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. வெடிவிபத்தை தொடர்ந்து மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தால் அந்தப் பகுதியே புகை மண்டலமாக மாறியுள்ளது. மேலும், பட்டாசு ஆலையில் பயங்கரமாக வெடித்து சிதறியதால் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு அதிர்வு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. படுகாயமடைந்த சில பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விபத்து நடந்த பட்டாசு ஆலையில் 30 தொழிலாளர்கள் பணியாற்றியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தால் அப்பகுதி அருகே உள்ள மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன் மூணாறு.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts