
கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்திலுள்ள கோடாலியில் எட்டு வயது சிறுவன் ஆல்ஜோ பாம்பு கடித்து உயிரிழந்தான். அல்ஜோவின் சகோதரன் அனோஜ் (10) ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நேற்று இரவு சுமார் 2 மணியளவில், இருவருக்கும் வயிற்று வலி ஏற்பட்டதால், ஏதோ உணவு நச்சுத்தன்மை ஏற்பட்டிருக்கலாம் என்று பெற்றோர்கள் நினைத்தனர். பின்னர், அதிகாலை 3 மணியளவில், குழந்தைகளின் உடல்நிலை மோசமடைந்ததால், இருவரும் ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பரிசோதனையின் போது மருத்துவர் குழந்தைகளின் உடம்பில் பாம்பு கடித்ததற்கான காயம் கண்டறிந்தார்கள். இது குறித்து குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து உறவினர்களும் அக்கம்பக்கத்தினர்களும் சேர்ந்து வீட்டைச் சோதனையிட்டப் போது, இரண்டு குழந்தைகளும் தூங்கியிருந்த அறையில் தலையணைக்கு கீழே ஒரு விஷப்பாம்பைக் கண்டனர்.
இரவில் தூங்கிக்கொண்டிருந்த சிறுவன் பாம்பின் கடியேற்று உயிரிழந்த சம்பவம் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-அஃப்லால்.












