
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் 400 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் இந்து சமய அறநிலை துறை சார்பாக சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது இந்த திருவிழாவில் 11 நாள் வெகு விமர்சியாவும் சிறப்பாகும் இந்த விழா ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமுதாயத்தின் அடிப்படையில் ஒவ்வொரு துறை சார்ந்தும் நடைபெறும். இதில் முதலாவது நாள் (20.4.26) திங்கள் கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கிய முதல் நாள் முதலியார் சமுதாயம் மண்டகப்படி மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டு முதலாவது நாள் திருவிழா நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

2 ம் நாள் திருவிழாவாக இல்லநத்து பிள்ளைமார் சமுதாய மண்டபடியாகவும். 3 ம் நாள் திருவிழா வாணிய செட்டியார் சமுதாய மண்டபடியும் 4 ம் நாள் காசுக்கார செட்டியார் சமுதாய மண்டபடியும் 5 ம் நாள் விளாத்திகுளம் காவல்துறையினர் மண்டபடியாக. 6 ம் நாள் துளசி பற்றி தேவர் சமுதாய மண்டபடியாகவும். 7 ம் நாள் விளாத்திகுளம் வருவாய் துறையினர் அலுவலர்கள் மண்டபடியாக. 8 ம் நாள் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் இதில் ஸ்ரீ நடராஜருக்கு அபிஷேகமும் பால் இளநீர் சந்தனம் குங்குமம் திருநீர் என பல வகையான வாசனை கொண்டு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது ஸ்ரீ நடராஜர் பச்சை சாத்தி எழுந்தருளல் செய்தார் சிறப்பு பூஜைகள் செய்த னர் இந்த திருவிழாவில் முத்துக்குமார் வட்டார வளர்ச்சி அலுவலர் பெரிய துறை செல்லத்துரை ராமச்சந்திரன் ரகுராம் சக்கையா அஜித்குமார் ராமநாதன் பழனிச்சாமி மற்றும் அலுவலக பணியாளர்கள் என ஏராளமானவர்கள் பூஜையில் கலந்து கொண்டு இவர்களுடன் பொதுமக்களும் மற்றும் குழந்தைகள் மீனாட்சி அம்மன் வேடன் அணிவித்து அம்மன் அருள் பெற்றனர் பொதுமக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர் சாமி தரிசனம் பெற்று சென்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.












