இடுக்கி மாவட்டத்தில் ஆக்கிரமிப்பாளர்கள் தமிழர்கள் மட்டும்தானா…?

இடுக்கி மாவட்ட ஆட்சியர் மரியாதைக்குரிய தினேசன் செருவாட் அவர்களுக்கு கேள்விகள்…!!!
நேற்று காலை இடுக்கி மாவட்டம் உடும்பஞ்சோலை தாலுகாவில் உள்ள பூப்பாறையில்,பண்ணையாறு ஆற்றின் ஓரத்தில் கட்டப்பட்ட அப்பாவி தமிழ் மக்களின் வீடுகளை கடும் போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அப்புறப்படுத்தும் வேலையை தொடங்கி இருக்கிறீர்கள்,பரவாயில்லை. அதற்கு நீங்கள் சொன்ன காரணமும் நியாயமாகவே படுகிறது. 88 கட்டடங்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு, 56 கட்டடங்கள் இன்று இடித்து அப்புறப்படுத்தப்பட்டிருக்கிறது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் அத்தனை பேரும் அப்பாவி தமிழ் மக்கள்.ஆனால் அதேபோல் கேரள உயர் நீதிமன்றத்தின் எச்சரிக்கையையும் மீறி, அதே பூப்பாறை-சாந்தம்பாறை நகரத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருக்கும் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை இதுபோன்று இடித்து அப்புறப்படுத்துவதற்கு தயாரா என்கிற கேள்வியை முன்வைக்கிறேன்…?

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அன்றைய இடுக்கி மாவட்ட மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் திரு சி வி வர்கீஸ் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்த எட்டு சென்ட் நிலம், ஏலக்காய்_மலை_காப்பகம் என வகைப்படுத்தப்பட்ட பகுதியில் அமைய பெற்றிருக்கிறது என்பதும், 2020 ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையின்படி அந்தப் பகுதியில் வீடு கட்டுவதற்கும், கடைகள் கட்டுவதற்கும் தடை இருக்கிறது என்பது தெரிந்தும், கட்டடம் கட்டப்பட்டது.

அது குறித்தான இடுக்கி மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையை இப்போது தொடர முடியுமா…?
2019 முதல் 2022 வரை இடுக்கி மாவட்டம் சின்னக்கானல் பஞ்சாயத்தில், உடும்பஞ்சோலை சட்டமன்ற உறுப்பினராக இருந்த முன்னாள் கேரள மின்சார துறை அமைச்சர் எம் எம் மணியின் உடன்பிறந்த தம்பியான திரு .லம்போதரன் ஆக்கிரமித்ததாக சொல்லப்பட்ட 250 ஏக்கர் நிலம் குறித்த வெள்ளை அறிக்கை நீங்கள் வெளியிட தயாரா…?

அதே சின்னக்கானல் பஞ்சாயத்தில் உள்ள வேநாட்டு தாவளத்தில் 2022 ஆம் ஆண்டு மூன்று ஏக்கர் 82 சென்ட் ஆக்கிரமிப்பு தொடர்பாக இடுக்கி மாவட்ட நிர்வாகமும் லம்போதரனுக்கு கொடுத்த நோட்டீஸ் என்ன நிலையில் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறோம்…?
சின்னக்காணல் பஞ்சாயத்தில் பொதுப்பார்வையாளரை மையமாக வைத்து, வெளிப்படையான ஒரு அளவீட்டுக்கு இடுக்கி மாவட்ட நிர்வாகம் எப்போது முன் வரும்…?

149 ஆண்டுகளாக அந்த மலையக பூமியில் ஒரு அடிமையாக தங்கள் வாழ்க்கையை தொடங்கிய இந்த தமிழ்ச் சமூகத்திற்கு குடியிருக்க ஒரு வீட்டுமனை கொடுப்பதற்கு மனம் இல்லையா இடுக்கி மாவட்ட நிர்வாகத்திற்கு…?

குடியிருப்பவனுக்கு வீடு சொந்தம், உழுபவனுக்கு நிலம் சொந்தம் என்று 1957-இல் ஒரு இயக்கமாக புறப்பட்ட இ எம் எஸ் நம்பூதிரி பாட் தலைமையிலான மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை முழக்கம் என்னவானது…?

குமுளி முதல் பெருவந்தானம் வரை சாலையின் இரு மருங்கிலும் வண்டிப்பெரியாறு, பீருமேடு வழியாக ஆற்றின் புறம்போக்கு ஓடைகளை ஆக்கிரமித்து மலையாளச் சமூகம் கட்டியிருக்கும் அத்தனை வீடுகளையும் இடுக்கி மாவட்டம் நிர்வாகம் இடித்து அப்புறப்படுத்த தயாரா…?
மலையாள குடியேற்றவாசிகளுக்கு ஒரு சட்டம், அப்பாவி தமிழ் மக்களுக்கு ஒரு சட்டம் என்கிற இனப்பகுபாட்டை இடுக்கி மாவட்ட நிர்வாகம் மேற்கொள்கிறதா என்று தெரிய வேண்டும்…?
2022 ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி தோழர் பினராயி விஜயன் அரசாங்கத்தால் தொடங்கி வைக்கப்பட்ட டிஜிட்டல் ரீசர்வே மூலம், ஹை ரேஞ்சில் அளவீடு செய்யப்பட்ட புதிய பட்டயங்களை இடுக்கி மாவட்ட நிர்வாகம் விநியோகிக்க போவது எப்போது…?

சின்னக்காணல் பஞ்சாயத்து சூரியநெல்லியை சுற்றி இருக்கும் மலையாள ஆக்கிரமிப்புகளை, நாங்கள் பராதி கொடுத்தால் அப்புறப்படுத்தி கொடுக்குமா இடுக்கி மாவட்ட நிர்வாகம்…?
ஒருபுறத்திலே 416 தேயிலைத் தோட்ட குடியிருப்புகளை காலி செய்ய வேண்டும் என்று டாட்டா நிறுவனம் கொடுக்கும் நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது எங்கள் அப்பாவி தேயிலைத் தோட்ட தமிழ் சமூகம்.

வரும் ஏப்ரல் 26, 27, 28 ஆகிய மூன்று தேதிகளில் பிளாண்டேஷன் இன்ஸ்பெக்டர் முன்னால் மேற்கண்ட 416 வீட்டு உரிமையாளர்களும் ஆஜராகி,தகுந்த விளக்கம் கொடுக்க வேண்டும். விளக்கம் சரியாக இல்லை என்றால் அதிலிருந்து ஏழு நாட்களுக்குள் அத்தனை வீடுகளையும் காலி செய்வோம் என்று மிரட்டும் டாடாவை நாங்கள் மிரட்டுவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்…?
ஒருபுறம் கண்ணன் தேவன் கம்பனியை வைத்து மிரட்டுவது
இன்னொரு புறம் இடுக்கி மாவட்டத்தில் கையேற்ற பூமிகளில் ஆதிக்கம் செலுத்தும் மலையாள குண்டர்களைக் கொண்டு மிரட்டுவது
வனத்துறையை கொண்டு மிரட்டுவது
இறுதியாக வருவாய்த் துறையை கொண்டு மிரட்டு என நாலாபுறமும் நெருக்கடியை கொடுத்து இந்த அப்பாவி தமிழ் சமூகத்தை இடுக்கி மாவட்டத்தை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று நினைக்கும் உங்களுடைய கனவுகள் ஒருபோதும் பலிக்காது.
இடுக்கி மாவட்ட ஆட்சியர் அவர்களே…
ஆக்கிரமிப்பு என்று யார் செய்தாலும் அதற்குப் பெயர் ஆக்கிரமிப்பு தான்…
உங்கள் நடவடிக்கை தமிழ் மக்கள் மீதுதான் இருக்கும் என்றால்
அதை களத்திலேயும் எதிர் கொள்வோம்
சட்டப்படியாகவும் எதிர்கொள்வோம்…
விரைவில் தமிழகத்திலிருந்து கேரளாவை நோக்கி செல்லும் அத்தனை சாலைகளையும் முற்றுகையிடுவதற்கான வேலையை தொடங்கி விட்டோம்…
இடுக்கி மாவட்டத்தில் வாழும் அப்பாவி தமிழர்கள் நாதியற்ற சமூகம் அல்ல…
உலகெங்கும் வாழும் 10 கோடி தமிழர்களின் ரத்த உறவு அவர்கள்…
ஈழத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு அழித்தொழிக்கப்பட்டதை போல
இடுக்கியில் ஒருபோதும் நடக்க அனுமதியோம்…
ச_பென்னிகுயிக்_பாலசிங்கம்
ஒருங்கிணைப்பாளர்
பெரியாறு_வைகை_பாசன_விவசாயிகள்_சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன் மூணாறு.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts