
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை அடுத்து உள்ள நல்லா காத்து எஸ்டேட் பகுதியில் நான்கு நாட்களாக குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அலைமோதுகிறார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அப்பகுதியில் குடிநீர் மோட்டர் எந்திரம் பழுதடைந்ததால் அப்பகுதி நிர்வாகி தண்ணீர் டேங்குகளில் கொண்டு கொடுத்தனர். ஆனால் அப்பகுதியில் குடிப்பதற்கு மட்டும் தண்ணீர் உள்ளது. சமைக்கவும் குளிக்கவும் தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படுகிறோம் என அப்பகுதி மக்கள் மிகுந்த சோகத்துடன் கூறுகிறார்கள்.
மக்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றான குடிநீர், பற்றாக்குறை இல்லாமலும் சுத்தமாகவும் கிடைக்க வால்பாறை நகராட்சி ஆய்வாளர் மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறையில் இருந்து செய்தியாளர்
-திவ்யக்குமார்.












