கோவில் கொடை விழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது!!

தூத்துக்குடி செல்வவிநாயகபுரம் பத்திரகாளியம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு மேயா் ஜெகன் பொியசாமி அன்னதானத்தை தொடங்கி வைத்தாா்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தூத்துக்குடி செல்வவிநாயகபுரம் பத்திரகாளியம்மன் கோவில் கொடைவிழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது. செல்வ விநாயகபுரம் நந்தகோபாலபுரம் கோவில் கொடை விழாவை முன்னிட்டு கடந்த 5ம் தேதி கால்நாட்டு விழா நடைபெற்றது.

கொடைவிழாவை முன்னிட்டு தினமும் இரவு அம்மனுக்கு அலங்காரபூஜை பஜனையுடன் நடைபெற்று 10ம் தேதி மாகாப்பு பூஜையும் 11ம் தேதி மாலை தீர்த்தவாரி செல்லும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இரவு 201 திருவிளக்கு பூஜையில் நாட்டில் மழை வளம் பொழிந்து விவசாயம் செழித்து வறட்சி நீங்கி, உலகில் அன்பு அமைதி நிலவளம் வேண்டியும், எல்ேலாரும் எல்லா செல்வங்களோடு வாழ வேண்டும். கணவர்கள் ஆயுள் வேண்டியும் குழந்தைகள் படிப்பு ஆரோக்கியம், அனைவரும் நலமுடன் வாழ வேண்டி, நோய் நொடி இல்லாமலும், தொழில்வளர்ச்சி எல்லோருக்கும் சிறப்பாக அமைந்து தமிழகம் அமைதி பூங்காவாக அனைவரும் ஓற்றுமையுடன் வாழ்ந்து பொருளாதார நெருக்கடி நீங்கிடவும் வேண்டி பஜனை பாடல்களுடன் தீப அலங்காரம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து 12ம் தேதி செவ்வாய்கிழமை காலை அபிஷேகபூஜை, அலங்கார பூஜையுடன் மதியக் கொடைக்கு பின் நடைபெற்ற சமபந்தி அன்னதானத்தை மேயா் ஜெகன் பொியசாமி தொடங்கி வைத்தாா்். முன்னாதாக சாமி தாிசனம் செய்தாா்.

விழாவில் தர்மகர்த்தா ராஜாபெரியசாமி, உதவி தர்மகர்த்தா ஆறுமுகச்சாமி, காரியதரிசி முனியசாமி, பொருளாளர்கள் ரவீந்திரன், காமராஜ், கணக்கர் தெய்வேந்திரன், ஆடிட்டர்கள் மாரியப்பன், அய்யாத்துரை, ஆலோசகர்கள் துரைசாமி, சித்திரவேல், சொல்வழங்கு, ஸ்ரீதரன், இளையராஜா, பெரியசாமி, ராஜ்குமாா், கமிட்டி உறுப்பினர்கள் வள்ளிராஜன், ஜெயபாண்டி, முருகன், பாலு, கணேஷ் காந்தகுமார், பாலமுருகன், ராம்குமாா், அருண்ஜெயக்குமாா், விஜயகுமாா், சிவசுந்தர், பெரியசாமி, பாலசுப்பிரமணியன், பொியசாமி, அருணகிரி, முருகேசன், பூவலிங்கம், ராஜலிங்கம், கணேசன், சண்முகம், கணேசமூர்த்தி, இளைஞர் அணியினா்கள் சுரேந்தா், சரவணக்குமாா், ராஜ்குமாா், ராஜேஷ்குமாா், முத்தமிழ்செல்வன், தங்கராஜ், மாவட்ட திமுக பொறியாளர் அணி துணை அமைப்பாளர் கணேஷ்குமாா், மின்வாாிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகா், ஜேஸ்பா், உள்பட பக்தா்கள் கலந்து கொண்டனா்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-பரணி பாலா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts