
கோவை மாவட்டம் போத்தனூர்: நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜய் அவர்களின் த வெ க கட்சி நூற்றி எட்டு இடங்களை பிடித்து அமோக வெற்றி பெற்றது. தமிழகத்தில் இதுவரை திமுக, அதிமுக, என்ற நிலைப்பாட்டை தூள் தூளாக உடைத்து எறிந்தது. தமிழக வெற்றி கழகம் என்னும் சக்தி மக்களிடத்தில் புதிய ஆட்சியை அமைக்கிறார் தளபதி விஜய்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும் என்பார்கள் ஆனால் இன்றைய சின்ன குழந்தைகள் மத்தியில் சூப்பர் ஸ்டாராக திகழும் நடிகர் விஜய் என்ற மாமனிதர் அரசியல் களத்தில் தனக்கென ஒரு இடத்தை முத்திரை பதித்து வருகிறார். தமிழக மக்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக இவர் தொடங்கிய கட்சி தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தது.
அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் போத்தனூர் வெள்ளலூர் ரோடு கோண வாய்க்கால் பாளையம், மகாலிங்கபுரம், சித்தன்னபுரம்,ஈஸ்வர நகர், பகுதிகளில் உள்ள தொண்டர்கள் இன்று பதவி ஏற்ற விஜய் அவர்களுக்கு உற்சாகமாக பட்டாசுகள் வெடித்து திருவிழாவைப் போல் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சி காலை கோண வாய்க்கால் பாளையம் முதல் ஸ்ரீராம் நகர் வரை சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் டி வி கே தொண்டர்கள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
இந்த நிகழ்ச்சி கோவை மாவட்டம் கோண வாய்க்கால் பாளையம் பகுதி செயலாளர் சுஜய் வனிதா தலைமையில் நடைபெற்றது. அவர்கள் உடன் பல்வேறு தொண்டர்கள் கலந்து கொண்டு பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி வாக்களித்த மக்களுக்கு நன்றிகளையும் செலுத்தி வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சி சிறுபான்மை துறை கோவை தெற்கு பகுதி தலைவர் முகமது ஹாரூன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தலைமை நிருபர்
– ஈசா.












