
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வால்பாறை கோவை தெற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகச் செயலாளர் மாண்புமிகு கே. விக்னேஷ் அவர்கள் முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து (அமமுக) விலகி அண்மையில் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தார் அண்ணன் நெல்லைச் செல்வன்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதனைத் தொடர்ந்து வால்பாறை நகர தவெக நிர்வாகிகளை அவர் நேரில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது நகர நிர்வாகிகளுக்குப் பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்திய நெல்லைச் செல்வன் கழகப் பணிகளில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டார்.
அமமுக-விலிருந்து விலகி தவெக-வில் இணைந்துள்ள நிர்வாகிக்கு வால்பாறை நகரத் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் தங்களது நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும் வரவேற்பையும் தெரிவித்துக் கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-வால்பாறை P.பரமசிவம்.












